வீடு வாங்கும் அதிர்ஷ்டம் இப்போது யாருக்கு உண்டு தெரியுமா..?

thenmozhi g   | Asianet News
Published : Mar 16, 2020, 12:49 PM IST
வீடு வாங்கும் அதிர்ஷ்டம் இப்போது யாருக்கு உண்டு தெரியுமா..?

சுருக்கம்

இன்று கவனமுடன் வாழ ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். பண தேவைகள் பூர்த்தி ஆகும். நீங்கள் செய்யும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். இன்று மாலை நேரத்தில் மன குழப்பம் வர வாய்ப்பு உள்ளது.

வீடு வாங்கும் அதிர்ஷ்டம் இப்போது யாருக்கு உண்டு தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாள். யாரையும் அனுசரித்துச் செல்லவேண்டும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

ரிஷப ராசி நேயர்களே...!

இன்று கவனமுடன் வாழ ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். பண தேவைகள் பூர்த்தி ஆகும். நீங்கள் செய்யும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். இன்று மாலை நேரத்தில் மன குழப்பம் வர வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி நேயர்களே..!

குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் விருத்தி அடையும். உத்தியோக மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள்.

சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! சவரன் ரூ.31,696..!

கடக ராசி நேயர்களே...!

சுபகாரிய பேச்சுகள் அடிபடும். கண்டும் காணாமல் சென்ற உறவினர்களை தேடி வந்து பேசுவார்கள். வீடு வாங்குவது குறித்து முக்கிய முயற்சி எடுப்பீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

தேவைகள் பூர்த்தி ஆகும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் கூட்டாளிகள் வந்து இணைவார்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

வழக்குகள் சாதகமாக அமையும். வெளி உலகத்தில் நண்பர்கள் வட்டம் விரிவடையும். வீடு மனை வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் மெல்ல மெல்ல அகலும்.

துலாம் ராசி நேயர்களே...!

கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக நடைபெறும். உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்தி ஒன்று உங்களுக்கு வந்து சேரும். எதையும் வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே..!

வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருங்கால நலன்கருதி வங்கியில் பணத்தை சேமித்து வைப்பீர்கள். பயணிகளுக்கு ஓர் நல்ல பலன் கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே..!

நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரக்கூடிய நாள். நீங்கள் சொல்லும் யோசனைகள் மற்றவர்களுக்கு வெற்றியை தேடித் தருவதாக அமையும்.

மகர ராசி நேயர்களே..!

வரவு இருமடங்காக அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.தொழில் மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

வெளியில் கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும். வெளியுலக தொடர்பு உங்களுக்கு கிடைக்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. 

மீனராசி நேயர்களே...!

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். கடந்த இரண்டு நாட்களாக வராமலிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பஞ்சாயத்துக்கள் விரைவில் முடிவுக்கு வரும்ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்