கொரோனா எதிரொலி..! சென்னையில்...இதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க..!

By ezhil mozhiFirst Published Mar 17, 2020, 2:52 PM IST
Highlights

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகள்,கல்லூரிகள், மால்கள்,ஜிம்,நீச்சல் குளம், சினிமா அரங்குகள் என அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கொரோனா எதிரொலி..! சென்னையில்...இதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க..!

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவிலும் மெல்ல  மெல்ல அதிகரித்து வருகிறது.இன்றைய நிலவரப்படி,129 பேருக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகள்,கல்லூரிகள், மால்கள்,ஜிம்,நீச்சல் குளம், சினிமா அரங்குகள் என அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக, சென்னையே வெறிச்சோடி காணப்படுகிறது.அதிலும் குறிப்பாக   சாலைகளில் மக்கள்  கூட்டம் பார்க்க முடியவில்லை....மால்கள் மூடப்பட்டு உள்ளதால் வெறிச்சோடி கிடக்கிறது.மேலும் ஐ.டிநிறுவனங்கள் முதல் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி கொடுத்து உள்ளதால் அவரவர் வீட்டில் இருஅந்தபடியே வேலை செய்து வருகின்றனர். ஆக பிரோதத்தில் எப்போதும் பரபரப்பாக  இருக்கும் சென்னை தற்போது அமைதியின் மறுபக்கமாக பார்க்கப்படுகிறது.

மேலும் பேருந்து நிலையத்தில் கூட மக்களின் கூட்டம் இல்லை.கொரோனா பயத்தால் இப்படி ஒரு மாற்றம் வருமா என்றால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதனால் பெரும்  முதலாளிகளுக்கு பொருளாதார ரீதியாக நஷ்டம்  ஏற்படும். பொருளாதாரத்தை  பொருத்தரவரையில் பல கோடி  நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் நாட்டில் நிலவும் இந்த  அமைதியால் மக்கள் ஒரு பக்கம் வீட்டில் ஓய்வு எடுக்க நேரம் கிடைத்து உள்ளது என  எடுத்துக்கொள்ளலாம்..

click me!