கொரோனா எதிரொலி...! "தேசிய பேரிடராக" அறிவித்தது மத்திய அரசு..!

By ezhil mozhiFirst Published Mar 14, 2020, 3:20 PM IST
Highlights

மாநில பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா எதிரொலி...!  "தேசிய பேரிடராக" அறிவித்தது மத்திய அரசு..! 

கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய உள்துறை அமைச்சகம். மாநில பேரிடர் நிதியிலிருந்து உதவித்தொகை பெற ஏதுவாக பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு.

மாநில பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய பேரிடராக அறிவித்துள்ளதால் மாநில அரசு வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் விரைந்து எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது

சீனாவில் உருவான ஹுவாங் வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் இருந்தாலும், உலக நாடுகளிடையே தொடர்ந்து பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது 86 பேர் வரை வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரண்டு உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பரவாமல் தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்கும் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டும், மொபைல் போனில்  ரிங்டோன் வைத்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென்றும், சுபநிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் தள்ளி வைப்பதும் அல்லது மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே சேர்ந்து நிகழ்ச்சியை நடத்தி வைப்பதும்... இது போன்று தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது மத்திய அரசு.

இது தவிர பல்வேறு மாநிலங்களில் வரும் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரி திரையரங்குகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உள்நாட்டு வர்த்தகம்  முதல் விமான சேவை வரை அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. இப்படி ஒரு நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு. மேலும் மாநில பேரிடர் நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான உதவிகளை வழங்க ஏதுவாக தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!