சனி பெயர்ச்சி கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.அதனை தொடர்ந்து மக்கள் பொதுவாகவே இந்த ஆண்டு நமக்கு எப்படி இருக்குமோ என எண்ணி கோவிலுக்கு சென்று பல பரிகாரங்கள் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2G வழக்கில் கனிமொழி மற்றும் ராசா இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்
அதாவது 7 ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வந்த இந்த வழக்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இதனை மக்கள் தற்போது எப்படி பார்க்கிறார்கள் என்றால்,சனிபெயர்ச்சி திமுகவிற்கு நல்லாவே வொர்க்அவுட் ஆகிறது என்றுதான்....
அதிலும் குறிப்பாக,”ஏழரை ஆண்டுகள் வெச்சு செய்தால்அது “சனி” என்றும், 7 ஆண்டுகள் வச்சிருந்தும் ஒன்றும் செய்யாமல் விட்டால் அது சைனி” என்று சமூக வலைத்தளங்களில் நெட்டீசன்கள் தெரிவித்து உள்ளனர்.
இன்னொரு பக்கம் சனிபெயர்ச்சி,திமுகவிற்கு நல்லாவே இருக்கு என கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும்,கோபாலப்புரம் இல்லத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
இந்த சந்திப்பையும்,2G தீர்ப்பையும் கூட ஒன்றாக இணைத்து பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சனி பெயர்ச்சியையும் சைனி தீர்ப்பையும் ஒப்பிட்டு வெளியான இந்த மீம்ஸ் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது