சாப்பிட அடம் பிடிக்குதா உங்கள் குழந்தை...? இப்படி சமைத்து கொடுங்க..அப்புறம் சொல்லுங்க...

First Published Dec 22, 2017, 1:03 PM IST
Highlights
babe will take food nicely if we prepared well with keerai


இன்றைய கால கட்டத்தில் தாய்மார்கள் அதிகம்  வேதனை கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால், தன் குழந்தை  சரியாக சாப்பிடுவதில்லை என்று  சொல்லி சொல்லியே  புலம்புவார்கள்...

ஆனால்  பெரியவர்களாகிய நாம்  என்ன செய்கிறோம்....நமக்கு பிடித்த உணவை காரம் சாரத்தோடு செய்து  ஒரு வெட்டு வெட்டுகிறோம் அல்லவா....

அதே போன்று தான் குழந்தைகளுக்கு எப்படி  செய்து கொடுத்தால்,பிடிக்குமோ அப்படி செய்து கொடுத்தால் தான்,நன்கு சாப்பிடுவார்கள்...

அது மட்டும் அல்ல....கண்டதையெல்லாம்  கொடுக்காமல்,உடல் நலத்திற்கு  தேவையான சத்தான உணவை  எப்படி சமைத்து  கொடுக்க வேண்டும் என்பதை  பார்க்கலாம் .....

கீரை  அடை

செய்முறை:

அனைத்து பருப்புகளையும் ஒன்றாகவும், அரிசியை தனியாகவும் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.முதலில் அரிசியை போட்டு அரைத்து, அதனுடன் பருப்புகளை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் கீரை, வெங்காயம், மிளகுத்தூள், சீரகத்தூள், பச்சைமிளகாய்,

தயிர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தோசைக்கல் காய்ந்ததும் சிறிய அடைகளாக போட்டு எடுக்கவும்.வேண்டியவர்கள் அடையில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம்.

பயன்:
இதனை தொடர்ந்து கொடுத்து வந்தால் இரும்புசத்து குறைபாடு வெகுவாக  குறையும். உடல்நலன் சீராக  இருக்கும்.

குறிப்பு :

முருங்கைகீரைக்கு பதிலாக  வேறு  பல கீரைகளையும்  சேர்த்துக்கொள்ளலாம்.இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. அடையும் நல்ல மிருதுவாக  இருக்கும். பார்க்கும் போதே குழந்தைகளுக்கு  பசியை தூண்டிவிடும்

click me!