கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதுடன், அன்பு, மன்னிப்பு மற்றும் இரக்கம் பற்றிய அவரது போதனைகளையும் கொண்டாடுகிறது. குடும்பத்தினருடன் பிணைப்பு, பரிசுகளை பரிமாறிக்கொள்வது மற்றும் ஒன்றாக உணவு தயாரிப்பது வரை உற்சாகமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் ஒன்று. கிறிஸ்தர்வர்களின் கடவுளான இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி, கிறிகொண்டாடப்படுகிறது. இந்த புனித நாள் அன்பு, மன்னிப்பு மற்றும் இரக்கம் பற்றிய அவரது போதனைகளையும் கொண்டாடுகிறது. கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடுவது முதல் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது வரை இந்த நாளில் அரவணைப்பையும் மகிழ்ச்சியையும் வலிறுத்தும் வகையில் கிறிஸ்துவர்கள் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு, முக்கியத்துவம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கிறிஸ்துமஸ் முக்கியத்துவம்
undefined
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவது முதல் குடும்பத்தினருடன் பிணைப்பு, பரிசுகளை பரிமாறிக்கொள்வது மற்றும் ஒன்றாக உணவு தயாரிப்பது வரை உற்சாகமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.. இது இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பற்றி சிந்திக்கவும் கொண்டாடவும் ஒரு நாளாகவும் உள்ளது. உலகம் முழுவதும் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகையாகவும் இது உள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால், மத மற்றும் மதச்சார்பற்றவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸின் வரலாறு
கிறிஸ்துமஸின் வரலாறு 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவின் பிறப்புக்கு முந்தையது. இயேசுவின் பிறப்பின் சரியான தேதி தெரியவில்லை.
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தேதியை பைபிள் சரியாக குறிப்பிடவில்லை. குறிப்பிட்ட தேதி அல்லது மாதம் எதுவும் இல்லை. இது குறித்த தெளிவான தகவல்கள் எதுவுமில்லை. ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையோ அல்லது இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் (ஈஸ்டர் ஆகியவற்றைக் கொண்டாடவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கொண்டாட்டம் முறையாக டிசம்பர் 25 தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு பைபிளில் எந்த நேரடி குறிப்பும் இல்லை., மாறாக இது ரோமானிய குளிர்கால சங்கிராந்தி திருவிழாவுடன் ஒத்துப்போகிறது.
ஏன் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது?
பண்டைய ரோம் வெவ்வேறு காலெண்டரைப் பயன்படுத்தியது, அதனால் குளிர்கால சங்கிராந்தி டிசம்பர் 25 அன்று தொடங்கியது.. இந்த நாளில் ரோமானியர்கள் குளிர்காலத்தின் முடிவையும் சூரியனின் மறுமலர்ச்சியையும் கொண்டாடும் வகையில் ஒரு விழாவை அனுசரித்தனர். சூரியனின் 'மறுபிறப்பை' குறிக்கும் குளிர்கால சங்கிராந்திக்குப் பிறகு பகல் பொழுது நீடிக்கத் தொடங்கும் இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இயேசு கிறிஸ்துவை 'உலகின் ஒளி' என்று அழைக்கப்படுகிறார். இந்த ஒளியின் கொண்டாட்டம் மற்றும் சூரியனின் 'மறுபிறப்பு' ஆகியவற்றுடன் இணைவதற்கு ஆரம்பகால கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25ஐத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் 4 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசால் கொண்டாட்டத்திற்கான தேதியாக டிசம்பர் 25-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. .
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க மத அர்த்தத்தைக் கொண்டுள்ளது, இந்த விடுமுறை அன்பு, இரக்கம் மற்றும் அமைதியின் செய்தியை அடையாளப்படுத்துகிறது. இன்று, மத சடங்குகள், குடும்பக் கூட்டங்கள், பண்டிகை உணவுகள் மற்றும் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. பலருக்கு, இது மகிழ்ச்சியைப் பரப்பி, நெருங்கியவர்களுடன் நீடித்த நினைவுகளை உருவாக்கும் நேரம். தேவாலய சேவைகளில் கலந்துகொள்வது, பரிசுகளை வழங்குவது மூலமாகவோ தொண்டுக்கு பணம் கொடுப்பது மூலமாகவோ தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை ஒற்றுமை, அன்பு மற்றும் நல்லெண்ணம் ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது.