சீனாவை மிரட்டி வந்த கொரோனா தென்கொரியா மீது படையெடுப்பு.! அச்சத்தில் அந்நாட்டு மக்கள்.!!

By Thiraviaraj RMFirst Published Feb 22, 2020, 9:02 AM IST
Highlights

சீனாவை தொடர்ந்து, தென்கொரியாவை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. சீனாவில் இருந்து 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவியிருந்தாலும் தென்கொரியாவிற்கு கொரோனா வைரஸ் படையெடுத்திருப்பது மற்ற நாடுகளை அச்சமடையச் செய்திருக்கிறது.

T.Balamurukan

 சீனாவை தொடர்ந்து, தென்கொரியாவை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. சீனாவில் இருந்து 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவியிருந்தாலும் தென்கொரியாவிற்கு கொரோனா வைரஸ் படையெடுத்திருப்பது மற்ற நாடுகளை அச்சமடையச் செய்திருக்கிறது.

தென்கொரியா நாட்டின், கியோங்சாங் மாகாணத்தின் தலைநகர் தேகுவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் கடந்த சில தினங்களுக்கு முன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதன் காரணமாக அங்கு கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.இதனால் அந்த நாட்டில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஜப்பானை தொடர்ந்து, சீனாவுக்கு வெளியே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா மாறியுள்ளது.

வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.நோய் பாதிப்பு அதிகம் உள்ள தேகு மற்றும் சியோங்டோ நகரங்கள் சிறப்பு பராமரிப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.அந்த நகரங்களில் மக்கள் பொது இடங்களில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

click me!