1.72 லட்சம் மாணவர்கள் பதிவு..! அதிரடி நடவடிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன்..!

By ezhil mozhiFirst Published Feb 21, 2020, 7:38 PM IST
Highlights

எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என குறிப்பிட்டுள்ள செங்கோட்டையன் இதுவரை 1.72 லட்சம் மாணவர்கள் ஆலோசனை பெற்று மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 

1.72 லட்சம்  மாணவர்கள் பதிவு..! அதிரடி நடவடிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன்..! 

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் இரவு 10 மணிக்கு மேல் சிறப்பு வகுப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

அதன்படி தனியார் பள்ளிகள் 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மணிக்கு மேல் சிறப்பு வகுப்ப எடுக்கக் கூடாது என்றும் மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என குறிப்பிட்டுள்ள செங்கோட்டையன் இதுவரை 1.72 லட்சம் மாணவர்கள் ஆலோசனை பெற்று மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான ஹெல்ப்லைன் சேவை மூலம் இதுவரை 1.72 லட்சம் பேர் பதிவு செய்து ஆலோசனை பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

click me!