அடுத்த "பெரிய லிஸ்ட் ரெடி" ..! சமூகவலைத்தளத்தில் "இப்படி ஒரு பதிவு" போட்டு இருந்தால் போலீஸ் வருது தயாரா இருங்க...

By ezhil mozhiFirst Published Jan 24, 2020, 1:34 PM IST
Highlights

சமீபத்தில் குழந்தைகள் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் இந்தியாவில் அதிகளவில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்தது. 

அடுத்த "பெரிய லிஸ்ட் ரெடி" ..! சமூகவலைத்தளத்தில் "இப்படி ஒரு பதிவு" போட்டு இருந்தால் போலீஸ் வருது தயாரா இருங்க...

சமூக வலைதளமான பேஸ்புக்கில் நீதிபதி ஒருவரை பற்றி தவறாக விமர்சனம் செய்ததற்காக மருதாச்சலம் என்பவர் கைது செய்யப்பட்டார்.  அவர் தற்போது ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சமூக வலைத்தளத்தில் ஆபாச கருத்துக்களை பதிவிட்ட குறைந்தது 10 நபர்கள் குறித்து வழக்கு விசாரணை நடைபெற்ற நேற்று முன்தினம் மதியத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சைபர்கிரைம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சமீபத்தில் குழந்தைகள் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் இந்தியாவில் அதிகளவில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்தது. குழந்தைகள் தொடர்பான பாலியல் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியும்  வியாபார ரீதியாக செயல்பட்டவர்களையும் அதிரடியாக லிஸ்ட் ரெடி செய்து ஒரு சிலரை கைது செய்தது காவல்துறை. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவிடுபவர்களும் தற்போது கைதாக வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமின்றி மற்றவர்களையும் ஆபாசமாக விமர்சனம் செய்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் வரும் 29 ஆம் தேத்திலுள் தமிழகம் முழுவதும் ஆபாச கருத்துக்களை யாரெல்லாம் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனரோ அவர்கள் குறித்த விவரத்தை வரும் 29 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என சைபர் கிரைம் ஏடிஜிபி- க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. 

click me!