கருஞ்சீரகம் இப்படி ஒரு நன்மை கொடுக்கும் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Jan 24, 2020, 12:13 PM IST
Highlights

கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரசவத்திற்கு பின் கருப்பை சுத்தமாகும். 

கருஞ்சீரகம் இப்படி ஒரு நன்மை கொடுக்கும் தெரியுமா..? 

100 வருடங்கள் நலமாக வாழ கருஞ்சீரகம் பல நன்மையை நம் உடலுக்கு தருகிறது என்பதை உணர்ந்து கொண்டால் கட்டாயம் இந்த டிப்ஸ் மேற்கொள்வீர்கள்.

அப்படி என்ன நன்மைகள் தெரியுமா? பொதுவாகவே எந்த ஒரு உணவை எடுத்துக் கொண்டாலும் அது சாதாரணமாக நம் உடலில் ஜீரணிக்க கூடியதாக இருக்கும் தருணத்தில் சரியாக படும். ஒருசில உணவுப் பொருட்கள் ஒருசிலருக்கு ஜீரண கோளாறை ஏற்படுத்தும். சாப்பிட்ட அரை மணி நேரத்தில் தொண்டையில் வலி ஏற்படுதல் அதன்பின்னர் சளி பிடித்தல் தலைவலி வாந்தி மயக்கம் என சொல்லிக் கொண்டே போகலாம்.

தங்கம் விலை இன்றும் சற்று உயர்வு..! சவரன் விலை எவ்வளவு தெரியுமா...?

ஆனால் இவை அனைத்திற்கும் பொதுவாக கருஞ்சீரகம் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கருஞ்சீரகத்தின் நன்மைகள்:

கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரசவத்திற்கு பின் கருப்பை சுத்தமாகும். இது தாய்மார்களுக்கு மிகவும் அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது. இதேபோன்று இன்றைய நிலையில் அனைவருக்கும் ஓர் சவாலான விஷயமாக பார்க்கப்படுவது உடல் பருமன் மற்றும் உடலில் தேங்கி இருக்கும் தேவையில்லாத கொழுப்பை அகற்றுவது என்பதே....

இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா..? 

கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் இவை மூன்றையும் நன்கு வறுத்து பொடி செய்து கொண்டு இரவில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்புகளை நீக்கி ரத்தம் சுத்திகரிக்க செய்யும். மற்றொரு விஷயம் என்னவென்றால் தோல் நோய் கண் வலி மாதவிலக்கு பிரச்சனை மற்றும் சளி இருமல் இவை அனைத்துக்கும் ஓர் நல்ல மெடிசின் பயன்படக்கூடியது கருஞ்சீரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கருஞ்சீரகத்தை முறையாக பயன்படுத்தி வந்தால் போதுமானது.நாம் நலமாக  வாழலாம்.

click me!