Lunar Eclipse 2023 : சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்களே இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!!

By Kalai Selvi  |  First Published Oct 27, 2023, 10:49 AM IST

2023 சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன...


இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் 28 அக்டோபர் 2023 அன்று இரவு நிகழப்போகிறது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவிலும் தெரியும். எனவே இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் ஐப்பசி பௌர்ணமி அன்று வருகிறது. கிரகத்தின் போது எந்த விதமான சுப காரியங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் கோயில் கதவுகளும் மூடப்படும். கிரகத்தின் போது சில விதிகளை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், கிரகத்தின் போது எதிர்மறை ஆற்றல் வளிமண்டலத்தில் ஆத்திக்கம் செலுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் தீய விளைவு விரைவில் தாயுடன் இருக்கும் குழந்தையின் மீது விழுகிறது. எனவே சந்திர கிரகத்தின் போது கர்ப்பிணி பெண்கள் மனதில் வைத்து சாஸ்திரங்களில் சில விதிகளை பின்பற்ற வேண்டும்.

Tap to resize

Latest Videos

மேலும் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி ஒரு கோட்டில் நிலைநிறுத்தப்படும் போது ஒரு முழு நிலவின் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பூமியின் நிழல் ஒரு கருப்பு வட்ட உறுப்பு சந்திரனைக் கடந்து செல்வது போல் ஒரு மாயையை உருவாக்கியது. வானியல் மற்றும் ஜோதிட உலகில் கிரகணங்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இதையும் படிங்க:  வரும் 28-ம் தேதி சந்திர கிரகணம்.. எந்த ராசிக்காரர்களுக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

சந்திர கிரகணம் 2023 எப்போது?

2023 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் அக்டோபர் 28 ஆம் தேதி காணப்பட்டு இரவு 11:31 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலை 3:36 மணிக்கு முடிவடையும். மேலும் சந்திர கிரகணத்தின் பாதகமான தாக்கங்களைத் தடுக்க, கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் போது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இதையும் படிங்க:  ஐப்பசி பௌர்ணமி அன்று கடைசி சந்திர கிரகணம்; திருப்பதி பழனி கோவிலில் பூஜை நேரத்தில் மாற்றம்..!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன:

  • கர்ப்பிணிப் பெண்கள் சந்திர கிரகணத்தின் போது உள்ளே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் வளரும் கருவுக்கு தீங்கு விளைவிக்கும்.
  • கத்திகள், கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
  • சந்திர கிரகணத்தின் போது எதையும் சாப்பிட அனுமதி இல்லை. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் மருந்துகளை சாப்பிடலாம்.
  • சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்க வேண்டும்.

  • சந்திர கிரகணத்தின் போது ஏற்படும் தீய விளைவுகளை குறைக்க, தியானம் மற்றும் மந்திரம் உச்சரிக்கவும்.
  • நம்பிக்கையின்படி, சந்திர கிரகணத்திற்கு முன்னும் பின்னும் குளிப்பது கிரகணத்தின் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க அவசியம்.
  • இந்த வான நிகழ்வின் போது, கர்ப்பிணிப் பெண்கள் வளையல்கள் போன்ற எந்த உலோக நகைகளையும் அணியக்கூடாது.
  • சந்திர கிரகணத்தின் போது தூங்குவது துரதிர்ஷ்டம், எனவே அதைத் தவிர்க்கவும்.
  • சந்திர கிரகணத்தின் போது, கர்ப்பிணிப் பெண்கள் வேலை செய்வதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும்.
click me!