ஆணுறை பயன்படுத்தாவிட்டால் எத்தனை பிரச்சனைகள் வரும் தெரியுமா? மருத்துவர்கள் சொல்லும் பகீர் தகவல்!

By Ansgar R  |  First Published Oct 26, 2023, 10:48 PM IST

ஆணுறை பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம், உடலுறவு சில சமயங்கள் இன்பமான ஒன்றாக தோன்றலாம். ஆனால், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்...


உடலுறவு என்பது இருபாலருக்கும் பிடித்தமான ஒன்று தான், ஆனால், அந்த அவசரத்தில் பலர் ஆணுறை பயன்படுத்துவதில்லை. சிலருக்கு ஆணுறை உபயோகிக்க வசதியாக இருக்காது. ஆனால் ஆணுறைகளை பயன்படுத்தினால் பல வகையான பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்ற முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தேவையற்ற கர்ப்பம் அல்லது தொற்றுகள் அல்லது பால்வினை நோய்களைத் தடுக்க பலர் ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஆணுறை பயன்படுத்தாததால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்

Latest Videos

undefined

ஆணுறையுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறீர்களா இல்லையா என்பது உங்களையும் உங்கள் துணையையும் பொறுத்தது. எனவே, பாலியல் ஆரோக்கியம் குறித்து உங்கள் துணையுடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் உரையாடுவது அவசியம். ஆனால் ஆணுறை இல்லாமல் உடலுறவு பல உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

திருமணத்திற்குப் பிறகு கணவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் 4 ராசி பெண்கள்; இதுல உங்க ராசி இருக்கா?

பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள்

எச்.ஐ.வி, கோனோரியா, கிளமிடியா போன்ற பாலியல் ரிதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் (STIs) அபாயத்தைக் குறைக்கின்றன. அவை ஆண்குறி மற்றும் மலக்குடல் திசுக்களுக்கு இடையே நேரடி தொடர்பைத் தடுக்கின்றன, தொற்று திரவங்களின் பரிமாற்றத்தை குறைக்கின்றன. நீங்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தாவிட்டால், நீங்கள் தொற்றுநோயைப் பெற வாய்ப்பு உள்ளது. 

HIV 

பாலியல் ரீதியாக பரவும் நோய் (STD), மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) ஆகியவற்றைத் 
தவிர்ப்பதற்கான மிகவும் நம்பகமான வழிகள், உடலுறவு கொள்ளாமல் இருப்பது அல்லது நோய்த்தொற்று இல்லாத துணையுடன் நீண்ட கால உறவில் இருப்பது. ஆனால் ஆணுறைகளைப் பயன்படுத்தாதது STD, HIV அபாயத்தை அதிகரிக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பாக்டீரியா தொற்று

இது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மட்டுமல்ல, ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வது பாக்டீரியா தொற்று மற்றும் வைரஸ்கள் ஒருவருக்கொருவர் பரவுகிறது. ஆணுறை பயன்படுத்தினால் இந்த ஆபத்தை குறைக்கலாம்.

திடீரென எழுந்து நிற்கும் போது தலை சுற்றுகிறதா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க..!

click me!