
கோடி கோடியாய் சம்பாதிக்க இன்ஸ்டாகிராம்...!
இன்ஸ்டாகிராம் முலமாக விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் வருமானம் பெறுகின்றனர்.
பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் மூலமாக ஈட்டும் வருமானம் எவ்வளவு என்பது என்பதை பற்றி ஆண்டுதோறும் ஒரு பட்டியல் வெளியாகும். அந்த வகையில் இந்த வருடமும் பிரபலங்கள் தங்களது ஒவ்வொரு பதிவிற்கும் எவ்வளவு தொகையை வருமானமாக பெறுகின்றனர் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருப்பது ரியாலிட்டி ஷோ நட்சத்திரம் மொகுல் கெய்லி ஜென்னர். அந்த வரிசையில் 19 வது இடத்தை பிடித்து இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் ஒவ்வொரு பதிவிற்கும் 271,000 டாலரை பெற்றுள்ளார்.
விராட் கோலி ஒவ்வொரு பதிவிற்கும் 196,000 டாலரை பெற்று 23 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.