இனி இலவச விசா..! இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட் ..!

Published : Jul 25, 2019, 02:34 PM IST
இனி இலவச விசா..! இந்தியர்களுக்கு அடித்த  ஜாக்பாட் ..!

சுருக்கம்

இலங்கை சென்று அங்கேயே விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் சீனாவையும் இந்தியாவையும் தற்போது சேர்க்கப்பட்டு உள்ளது. 

இலங்கை சென்று அங்கேயே விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் சீனாவையும் இந்தியாவையும் தற்போது சேர்க்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இதற்கு முன்னதாக 39 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை சென்ற பிறகு விமானநிலையத்திலேயே இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டம் அமலில் இருந்து வந்தது.

ஆனால் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கை உறுதி செய்யும் பொருட்டு இந்த இலவச விசா வழங்கும் திட்டத்தை கைவிட்டது இலங்கை. பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக குறைய தொடங்கியது.

பின்னர் மீண்டும் ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட 39 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வந்த பிறகு இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்தது.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் சீனா மற்றும் இந்தியாவை இந்த திட்டத்தில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது சேர்த்து உள்ளது இலங்கை. எனவே இனி இலங்கைக்கு இந்தியர்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டால் அங்கேயே சென்று இலவச விசா பெற்றுக் கொள்ளும் நல்ல வாய்ப்பை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை