தலைமுடி உதிர்வை  தாங்க முடியவில்லையா ?

 
Published : Feb 06, 2017, 05:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
தலைமுடி உதிர்வை  தாங்க முடியவில்லையா ?

சுருக்கம்

செயற்கை வழிகள் :

நம்முடைய அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கினை வகுக்கிறது.இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால் மக்கள் இயற்கை வழிகளைமறந்து செயற்கை வழிகளை பின்பற்றி பல பக்க விளைவுகளை சந்திக்கின்றனர் என்பது  குறிபிடத்தக்கது.

தலை முடி உதிர்வதை தடுக்க இயற்கை வழி :

இயற்கைவழி கேடு விளைவிக்காதது தலைமுடி உதிர்தலை தடுத்து தலைமுடி நீண்டு வளர எளிய இயற்கை வழி பல  உண்டு ....

தேவையான பொருட்கள்:

சோற்றுக்கற்றாழை

படிகாரம்

நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெய்.

செய்முறை:

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி உதிர்வது குறைந்து நன்றாக வளரும்

வீட்டில் இருந்தபடியே  இந்த இயற்கை வைத்தியத்தை  நாமே  செய்து கொள்வதால்,  தலைமுடி உதிர்வதை  தடுக்கலாம்.                       

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!