பி.எஸ்.என்.எல் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சி..!

By ezhil mozhiFirst Published Mar 16, 2019, 5:29 PM IST
Highlights

ஜியோ வருகைக்கு பின்னர் பெரிதளவு பாதித்த மற்றும் நிலைமையை சமாளிக்க முடியாமல் தவிக்கும் பல நிறுனங்களில் ஓரளவு தாக்கு பிடித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நஷ்டத்தை சந்திக்க  தொடங்கி உள்ளது.
 

ஜியோ வருகைக்கு பின்னர் பெரிதளவு பாதித்த மற்றும் நிலைமையை சமாளிக்க முடியாமல் தவிக்கும் பல நிறுனங்களில் ஓரளவு தாக்கு பிடித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நஷ்டத்தை சந்திக்க தொடங்கி உள்ளது.

அதன் படி கடந்த ஆண்டில் மட்டும் பி.எஸ்.என்.எல் 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடிக்கும் ஆளானது.

இதன் காரணமாக கடந்த மாதம் அதாவது பிப்ரவரி மாத சம்பளத்தை தங்களது ஊழியர்க்ளுக்கு வழங்க முடியாமல் தவித்து வருகிறது. மார்ச் மாதம் 10 ஆம் தேதி தாண்டியும் சம்பளம் வரவில்லை. பின்னர் தான் படிப்படியாக கேரளா, ஒடிசா என தொடங்கி நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கி வருகிறது.

இதே பிரச்னை மீண்டும் வர கூடாது என்பதற்காக, முன்கூட்டியே   ரூ.5,000 கோடி கடன் வாங்க திட்டமிட்டு உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க,1 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களில், 35 ஆயிரம் பேருக்கு, தன்விருப்ப ஓய்வு திட்டத்தையும் செயல்படுத்தும் என தெரிகிறது. 

இதற்கு முன்னதாக  எல்.டி.சி பயண சலுகை மற்றும் மருத்துவ  சிகிச்சை வசதியில் சில சலுகைகளை குறைத்து உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!