இன்னும் என்ன என்ன நடக்கப்போகுதோ? கொரோனா மனித மூளையை பாதிக்கும்.. மருத்துவர்கள் ஷாக் ரிப்போர்ட்..!

Published : Jul 12, 2020, 05:33 PM IST
இன்னும் என்ன என்ன நடக்கப்போகுதோ? கொரோனா மனித மூளையை பாதிக்கும்.. மருத்துவர்கள் ஷாக் ரிப்போர்ட்..!

சுருக்கம்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரை சுவாச மண்டலத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மூளையையும் பாதிக்கிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரை சுவாச மண்டலத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மூளையையும் பாதிக்கிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியது முதலே பாதிப்புகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு முதலில் தொண்டை தொற்று, சளி, காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், வாந்தி, தலைவலி, சுவையை உணர முடியாதது உள்ளிட்ட அறிகுறிகள் இருந்து வந்தன. அதேபோல், கிட்னி பாதிக்கப்பட்டவர்களையும் இந்த நோய் தொற்று எளிதில் பாதிப்பதாக கூறுகின்றனர். 

இந்நிலையில், அறிகுறி பட்டியலில் அடுத்ததாக மூளை பாதிப்பும் இணைந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பீதியை கிளப்பி உள்ளது. சமீபத்தில், கொரோனா சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பலருக்கு மூளையில் வீக்கம், மயக்கம், வலிப்பு போன்ற பல பாதிப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக இந்தியாவின் முன்ணனி மருத்துவமனைகளில் பணியாற்றும் நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் பலருக்கு நரம்பியல் பிரச்னைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து போர்டிஸ் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பிரவீண் குப்தா கூறுகையில், ‘‘கடந்த சில வாரங்களுக்கு முன் 28 வயதுடைய வாலிபர் மயக்க நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இவருக்கு வலிப்புக்கான மருந்து கொடுக்கப்பட்டது. அவருக்கு காய்ச்சல், சளி மற்றும் இருமலுக்கான அறிகுறி இல்லை. ஆனால், பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதை அவரது குடும்பத்தினர் நம்பவில்லை. இதன்பிறகு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு சென்று அவர் குணமடைந்தார். இவரைப் போன்று சிகிச்சை பெற்றவர்களில் பலருக்கு நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் இருந்தது என்கிறார்.  

டாக்டர் முகர்ஜி கூறுகையில், கொரோனா பாதித்தவர்களில் 10 சதவீதம் பேருக்கு நரம்பியல் பிரச்னை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உலகளவில் இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துவரும் நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டாலும், நரம்பியல் சார்ந்த பிரச்னைகளை அவர்கள் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார். 

எய்ம்ஸ் நரம்பியல் வல்லுநர் காமேஷ்வர் பிரசாத் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் மூளையை பலவழிகளில் பாதிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. நுரையீரலை பாதித்து, மூச்சுத்திணறலை ஏற்படுத்தி, உடலில் ஆக்சிஜனின் அளவை குறைத்து மயக்க நிலையை உருவாக்கும். இந்த காலக்கட்டத்தில் பலர் இறக்க நேரிடும். மேலும், நாக்கில் சுவை மற்றும் ருசி ஆகியவற்றை இல்லாமல் ஆக்கும். மேலும், கொரோனா வைரஸ் மூளையை தாக்கக்கூடிய வாய்ப்பு அதிகமுள்ளது. குறிப்பாக சிகிச்சைக்கு பிறகும், மூளை பாதிக்கும் நிலையே உள்ளது. எனவே, கொரோனா பாதிப்புக்கு தீவிர சிகிச்சையளிக்க வேண்டியது அவசியம். இதோடு பலருக்கு நரம்பு மண்டலத்தையும் தாக்கும் தன்மை இருப்பது தெரியவந்துள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்