சென்னையில் சைக்கிளில் வலம் வரும் போலீஸ்..! எல்லோரையும் அசத்தும் " அண்ணாமலை சைக்கிள் "..!

By T BalamurukanFirst Published Jul 5, 2020, 10:44 PM IST
Highlights

"ஏட்டையா" என்றாலே நம் எல்லோருக்கும் ஒரு கற்பனையான உருவம் இருக்கிறது. அவருக்கு பெரிய தொப்பை இருப்பது தான் அந்த அடையாளமே.அதுபோக போலீஸ் வேலை கிடைத்து விட்டாலே புல்லட்டில் பறக்கும் போலீசார் மத்தியில்  51 வயதானாலும் சைக்கிள் தான் தனக்கு புல்லட் என சென்னை நந்தம்பாக்கம் லிமிட்டில் வலம் வருகிறார் தலைமைக்காவலர்  சரவணன்.

 சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் சரவணன். இவர் தனது அன்றாட பணிகளுக்கு இன்னமும் சைக்கிளைத்தான் பயன்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறும் போது... "சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக என்னால் என் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடிகிறது. இன்னமும் எனக்குத் தொப்பை இல்லை.எனக்கு வாழ்க்கை முறை சார்ந்த நோய்களும் இல்லை. இதற்கு நான் சைக்கிள் ஓட்டுவதே காரணம் என்கிறார்.

 சென்னைவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ள தலைமைக் காவலர் சரவணனின் வீடு ஆதம்பாக்கத்தில் இருக்கிறதாம். அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர் தினமும் சைக்கிளில்தான் வருகிறார். ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுகிறேன்.போலீஸ் ஸ்டேசனுக்கு வருவதற்கு நான் பைக்கை பயன்படுத்துவது கிடையாது. நான் சைக்கிள் ஓட்டுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சைக்கிள் ஓட்டுவதன் மூலம் இரவில் நல்ல தூக்கத்தைப் பெற முடிகிறது. அத்துடன் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் எனக்கு இல்லை. மேலும் சைக்கிள் பயணம் சுற்றுச்சூழலைப் பாதிக்காது. நாட்டின் பல்வேறு நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்சினையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, சைக்கிள் பயன்பாடு மூலமும் காற்று மாசுபாடு பிரச்சினையைக் குறைக்கலாம்".என்கிறார்.

click me!