கொளுத்தும் வெயிலில் தாமரையால் சிவந்து போன சிவகங்கை..! தமிழர் பண்பாட்டை கையில் எடுத்த பாஜக..! என்ன செய்தார்கள் தெரியுமா...?

Published : Apr 06, 2019, 03:30 PM ISTUpdated : Apr 06, 2019, 03:35 PM IST
கொளுத்தும் வெயிலில் தாமரையால் சிவந்து போன சிவகங்கை..! தமிழர் பண்பாட்டை கையில் எடுத்த பாஜக..! என்ன செய்தார்கள் தெரியுமா...?

சுருக்கம்

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான எச். ராஜாவுக்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் களத்தில் இறங்கி ஓட்டு சேகரிக்கும் பணியில் தீயாய் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான எச். ராஜாவுக்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் களத்தில் இறங்கி ஓட்டு சேகரிக்கும் பணியில் தீயாய் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாகவே மக்களிடையே ஓட்டு சேகரிக்க செல்லும் போது அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு பக்கம், யாரைப் பார்த்தாலும் கையெடுத்து கும்பிட்டு கண்டிப்பாக ஓட்டு போடுங்கள் என்ற வசனம், தேர்தலில் வெற்றி பெற்றால் இதையெல்லாம் செய்வேன் அதையெல்லாம் செய்வேன் என்ற வாக்குறுதி..இதுபோன்ற சில விஷயங்கள் தான் பிரபலம்.

ஆனால் ஓட்டு கேட்க போகும் போது மக்களிடம் அணுகும்  முறை ஒன்று இருக்கும் அல்லவா? அந்த விஷயத்தில் பக்காவாக திட்டம் போட்டு செயலில் ஈடுபட்டு உள்ளது பாஜக இளைஞரணி.

பாஜக இளைஞர் அணி செயலாளரான பாண்டியன் தன் கையில் தாம்பூல தட்டுடன் தாமரை மலர்களையும் வெற்றிலை பாக்கையும் வைத்து வீடு வீடாக சென்று தெருத்தெருவாக சுற்றி மக்களிடம் தாமரை மலரை கொடுத்து, கண்டிப்பாக தாமரைக்கு வாக்களியுங்கள் என்று நம்பிக்கையுடன் வாக்கு சேகரித்து வருகிறார்.

மற்ற வேட்பாளர்கள் பிரச்சார உரையை தீவிர படுத்தினாலும் தமிழ் பண்பாடாகவும் தமிழ் மண்ணுக்கே உரித்தான கலாச்சாரத்தை கையிலெடுத்து பெரும் யுக்தியை செயலில் காட்டியுள்ளது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த சில புகைப்படங்கள் உங்களுக்காக....

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Kidney Health: சர்க்கரை நோயாளிகளே... சிறுநீரகத்தை பத்திரமா பாத்துக்க உங்க டயட்ல இந்த மாற்றங்களை செய்யுங்க!
நகர இரைச்சலில் இருந்து விலகி, அமைதியான இடத்தை தேடுறீங்களா? சென்னையிலிருந்து ஒரு நாள் சுற்றுலா செல்ல ஏற்ற 10 இடங்கள்.!