
நாடு முழுக்க ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலின் முதல் கட்ட தேர்தல் வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் பாஜக என்று தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது
விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் வருடத்திற்குள் இருமடங்காக உயர்த்தப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளது
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு குறிப்பாக இரண்டு ஏக்கர் நிலத்தை விட குறைவாக வைத்துள்ள விவசாய பெருமக்களுக்கு தேவையான நிதியுதவி அளிக்கப்படும் என்றும் தற்போது வழங்கிவரும் வருடத்திற்கு 6000 ரூபாய் என்ற நிலையிலிருந்து, மேலும் தொகையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,
அடுத்தபடியாக சிறு தொழில் செய்து வரும் விவசாயிகள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள விவசாயிகள் தங்களது 60 வயதை கடக்கும்போது பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வு ஊதியம் ஆக வழங்க புதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.
விவசாயத்திற்கு என 25 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயம் செய்ய முற்படும் விவசாய பெருமக்களுக்கு தேவையான பண உதவியாக ரூபாய் ஒரு லட்சம் வரை எந்தவித வட்டியும் இல்லாமல் ஒன்று முதல் ஐந்து வருட கால அவகாசத்துடன் வழங்கப்படும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டத்தின் மூலம் அனைத்து விவசாய பெருமக்களுக்கும் இன்சூரன்ஸ் வழங்க உள்ளதாகவும் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் திட்டமிட்டுள்ளது.
அதைப் போன்று நம் நாட்டிற்கு இறக்குமதி செய்வதை விட இந்தியாவில் இருந்து விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தரமான விவசாயத்திற்கு தேவையான தரமான விதைகளை சரியான நேரத்தில் விவசாயிகளின் வீட்டிற்கு அனுப்பப்படும் என்ற வாக்குறுதியும் கொடுத்துள்ளது பாஜக
.
விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பல முக்கிய திட்டங்களை அறிவித்து உள்ளது பாஜக. பாஜக வின் தேர்தல் அறிக்கை மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.