பிரியாணியிலும் கலப்படம்! என்னென்ன கலக்குறாங்ன்னு பாருங்க...

By vinoth kumarFirst Published Sep 8, 2018, 1:59 PM IST
Highlights

வாணியம்பாடி பிரியாணி, ஆம்பூர் பிரியாணிக்கு டஃப் கொடுப்பது என்னவோ திண்டுக்கல் பிரியாணிதான். ஆம்பூர் மற்றும் 
வாணியம்பாடி பகுதிகளில் பாசுமதி அரிசியால் செய்யப்பட்ட பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.

வாணியம்பாடி பிரியாணி, ஆம்பூர் பிரியாணிக்கு டஃப் கொடுப்பது என்னவோ திண்டுக்கல் பிரியாணிதான். ஆம்பூர் மற்றும் 
வாணியம்பாடி பகுதிகளில் பாசுமதி அரிசியால் செய்யப்பட்ட பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. தென் மாவட்டமான திண்டுக்கல்லைப் பொறுத்தவரை சீரகசம்பா, சோனாமுசுறி உள்ளிட்ட அரிசி ரகங்களில் இருந்து தயாரிக்கப்படும் பிரியாணிக்கு எப்போதும் டிமாண்ட் உண்டு.  

அந்த வகையில், திண்டுக்கல் பிரியாணி என்றால் ஒரு சில பிரபலமான கடைகள் தவிர சிறிய சிறிய கடைகளிலும் கிட்டத்தட்ட அந்த சுவையை கொண்டு வந்து விடுவார்கள். தற்போது போட்டி மயமாகி போய்விட்ட இந்த உலகத்தில் திண்டுக்கல்லில் திரும்பிய இடமெல்லவாம் டுபாகூர் பிரியாணி கடைகள் முளைத்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 100 ரூபாய், 120 ரூபாய்க்கு விற்கப்படும் பிரியாணி கடைகளில் அதிக லாப நோக்கத்துக்காக பழைய ஆட்டுக்கறி மற்றும் மாட்டுக்கறியை கலந்து விடுவதாக பகீர் குற்றச்சாட்டை எழுப்புகின்றனர் பிரியாணி பிரியர்கள்.

தொழில் போட்டி காரணமாவும் பிரியாணியின் சுவை கூடுவதற்காகவும் ப்ஃரைடு ரைஸ் போன்று அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக இயற்கையான முறைகளைத் தாண்டி அஜினோமோட்டோ எனும் வேதிப்பொருளை பிரியாணியிலும் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு இறுதியில் மனுசன கடிச்சாங்க என்பது போல் தற்போது பிரியாணியிலும் கலப்படத்தை மேற்கொள்கின்றனர் சில மூன்றாம் ஓட்டல் உரிமையாளர்கள். சில நேரங்களில் இது மனிதனின் உயிரோட விளையாடக் கூடிய ஒன்றாகும் என்ற விபரீதத்தை உணராமல் இதுபோன்ற தீய செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். கெட்டுப்போன பழைய மாமிசம் மற்றும் அளவுக்கு அதிகமான அஜினோமோட்டோ ஆகியவை உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தி ஃபுட் 
பாய்சன் எனப்படும் மோசமான ஒரு நிலையை ஏற்படுத்தி விடும். தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

click me!