வீட்டில் இருக்கக்கூடிய "உப்பு" தீய சக்தியை எப்படி விரட்டுதுன்னு பாருங்க....!

Published : Sep 08, 2018, 01:54 PM ISTUpdated : Sep 09, 2018, 08:14 PM IST
வீட்டில் இருக்கக்கூடிய "உப்பு" தீய சக்தியை எப்படி விரட்டுதுன்னு பாருங்க....!

சுருக்கம்

உப்பு என்றாலே...லக்ஷ்மி தான்....நம் வீட்டில் தெரியாமல் உப்பு கீழே சிந்திவிட்டால் கூட துடைப்பம் கொண்டு அதனை சுத்தம் செய்ய மாட்டார்கள். மாற்றாக கைகளிலேயே சுத்தம் செய்வார்கள் அலது ஒரு துணியை கொண்டு சுத்தம் செய்வார்கள்.

உப்பு என்றாலே...லக்ஷ்மி தான்....நம் வீட்டில் தெரியாமல் உப்பு கீழே சிந்திவிட்டால் கூட துடைப்பம் கொண்டு அதனை சுத்தம் செய்ய மாட்டார்கள். மாற்றாக கைகளிலேயே சுத்தம் செய்வார்கள் அல்லது ஒரு துணியை கொண்டு சுத்தம் செய்வார்கள்.

மேலும் உப்பு ஒரு கிருமி நாசினியாக கூட பயன்படுகிறது. கால் பாதங்களில் வெடிப்பு இருந்தாலும் உப்பு தண்ணீரில் சுத்தம் செய்வார்கள்...

தொண்டை வலி இருந்தாலும் உப்பு தண்ணீரால் வாய் சுத்தம் செய்வார்கள். ஒரு சிலர் குளிக்கும் போது தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து குளிக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம்  இருக்க வேறு எந்தெந்த விதத்தில் உப்பு மிகவும் நன்மை பயக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.


  தீயசக்திகளை துரத்தும் உப்பு...! 
 
மேட்டர் என்ன தெரியுமா..? உப்பை எந்த இடத்தில் எப்படி வைக்க வேண்டும் என்பது தான்...அதாவது வீட்டு அறையின் மூலைகளில், அது ஒரு மூலையாக வைத்தாலும், நான்கு மூலையில் வைத்தாலும் சரி...சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் உப்பு நிரப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உப்பை  வைத்து வந்தால், தீய சக்திகளை அறவே கிரகித்து கொள்ளும்...இந்த உப்பை தேவைப்படும் போது, மாற்றி வேறு உப்பை வைத்துக்கொள்ள வேண்டும்.

சாதாரண உப்பு  நம் வீட்டில் உள்ள தீய சக்திகளை எவ்வாறு விரட்டுகிறது என்பதை நம் முன்னோர்கள் அன்றே இதனை எல்லாம் கூறி ஒரு ஐதீகமாக மேற்கொண்டு வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்