"அந்த ஒரு நாள் நீங்க தூங்கி இருப்பீங்களே" பிக்பாஸ் பரணி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

By ezhil mozhi  |  First Published Aug 13, 2019, 3:42 PM IST

"நான் அத்திவரதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தேன். ஒரு திட்டத்தை பிளான் செய்வது என்பது மிகவும் எளிதானது; ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். 


அத்திவரதர் கோவிலுக்கு சென்ற கையோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் பரணி.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் வரும் கருத்து;

Tap to resize

Latest Videos

"நான் அத்திவரதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தேன். ஒரு திட்டத்தை பிளான் செய்வது என்பது மிகவும் எளிதானது; ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். அதனை நான் அத்திவரதர் கோவிலுக்கு சென்றபோது தான் உணர்ந்தேன்.

அந்தவகையில் சாதாரண காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை மிகவும் சிறப்பாக அவரவர் வேலைகளை திறம்பட செய்துள்ளனர். அரசு சார்பாகவும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அது கழிப்பிட வசதி முதல் குடிக்க குடிநீர் வழங்குவது என சில ஏற்பாடுகளை சிறப்பாக செய்து உள்ளனர். அந்த வகையில் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது.

இருந்தபோதிலும் சென்ற ஒன்பதாம் தேதி காவல் ஆய்வாளர் ஒருவரை மாவட்ட ஆட்சியர் தரக்குறைவாக பேசி திட்டி அவரை சஸ்பெண்ட் செய்வது வரை சென்றதை பார்த்தால்  மனம் மிகவும் வருத்தமளிக்கிறது. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் அந்த ஒரு நாளாவது நீங்கள் நிம்மதியாக தூங்கி இருப்பீர்கள்" என தெரிவித்துக் கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையை முடித்துக் கொண்டுள்ளார் பரணி. இவருடைய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. 

click me!