உஷார் மக்களே..! 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாயம் ஹெல்மெட்..!

Published : Aug 13, 2019, 03:09 PM IST
உஷார் மக்களே..! 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாயம் ஹெல்மெட்..!

சுருக்கம்

மிதிவண்டியில் செல்வதற்கே அதற்கேற்றவாறு ஹெல்மெட் கிடைக்கும் போது  குழந்தைகளுக்கான ஹெல்மெட் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட்   அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகளுக்கான சில கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி சட்டப்பிரிவு 129 இல் , சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதிவண்டியில் செல்வதற்கே அதற்கேற்றவாறு ஹெல்மெட் கிடைக்கும் போது குழந்தைகளுக்கான ஹெல்மெட் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. கட்டாயம் ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் இனி உயிரிழப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது  

 

தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது இதுவரை 8.21 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்பதால் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதை தவிற்குமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை