Omaicron: ஒமிக்ரானின் சளி, காய்ச்சல், இருமலுக்கு பலன் தரும் வெற்றிலை சட்னி..!! தயார் செய்வது எப்படி?

By manimegalai aFirst Published Jan 23, 2022, 8:14 AM IST
Highlights

ஒமிக்ரானின் சளி, காய்ச்சல், இருமலுக்கு பலன் தரும் வெற்றிலை சட்னி எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழரின் பாரம்பரிய வாழ்வில், வெற்றிலை இன்றியமையாததாகும். நம்முடைய முன்னோர்கள் கூற்றுப்படி வெற்றிலை சட்னியில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை இருப்பதால், உணவில் கட்டாயம் சேர்த்து கொள்வது நல்லது.

ஒட்டுமொத்த உலகமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, கரோனா என்னும் கொடிய வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. என்ன தான் இந்த கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்தில் பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு கரோனாவின் டெல்டா மாறுபாடு இந்தியாவில் இரண்டாம் அலையை ஏற்படுத்தி குறுகிய காலத்தில் பல உயிர்களைப் பறித்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கொரோனாவின் ஒமைகிறான் மாறுபாடு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது இந்த சூழ்நிலையில் நாம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.

நம்முடைய முன்னோர்கள் கூற்றுப்படி, வெற்றிலை சட்னியில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஜீரண சக்தியை கொடுக்கும் வல்லமை இருப்பதால், உணவில் கட்டாயம் சேர்த்து கொள்வது நல்லது. இந்த கரோனா கால கட்டத்தில், கால்சியம் சத்து நிறைந்த வெற்றிலை சட்டினியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளலாம். 

மங்களத்தின் அடையாளமான வெற்றிலையை, திருமண வீடுகளில் விருந்து உண்ட உடன் பின் போடுவது வழக்கம். ஆனால் காலப்போக்கில் அது காணாமல் போனது என்றாலும் . ஜீரணம் ஆகாது சமயத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும். 

இப்பொழுது நாம் சளித்தொல்லை கால்சியம் சத்து, ஜீரணம் ஆகிய அனைத்திற்கும் உதவக்கூடிய இந்த வெற்றிலையை வைத்து ஒரு அற்புதமான சட்னி எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை - 5 
 
மிளகு - 1/2ஸ்பூன்

சீரகம் - 1/2ஸ்பூன்

பூண்டு - 2 பல்

மிளகாய் - 4

பொரிகடலை - 3ஸ்பூன்

தேங்காய் - ஒரு மூடி

உப்பு - தேவையான அளவு

நல்ல எண்ணெய் - 2ஸ்பூன்

புளி -  1துண்டு

கடுகு - 1/2  ஸ்பூன்

உளுந்து - 1/4 ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

வாணலியில் மிளகு, சீரகம் இட்டு வறுத்து கொள்ளவும். அதன் பின்னர், மிக்ஸியில் வறுத்த மிளகு, சீரகம், தேங்காய், பொரிகடலை, வெற்றிலை, மிளகாய், உப்பு, பூண்டு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு உளுந்து தாளித்து சேர்த்து கொள்ளவும். வெற்றிலை சட்னி தயார்.

எனென்றால், இதில் வெற்றிலையுடன், மிளகு சேர்த்திருப்பது சளிக்கு, நல்ல எதிர்ப்பு சக்தியை அளிக்கும். மேலும் துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை காலை மாலை என இரு வேலைகள் குடித்து வர, வயிற்றுக் கோளாறுகள் மற்றும் சளித்தொல்லை நீங்கும். அதே நேரம், நல்ல நிவாரணம் பெறலாம்.எனவே, மேற்கூறிய  உணவினை உண்டு ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்!

click me!