Marriage Tips For Newly Bride : புதிதாக திருமணமான பெண்கள் கண்டிப்பாக இந்த 4 விஷயங்களை பின்பற்றுங்கள் உங்களது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
திருமணத்திற்கு முன் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் பல கேள்விகள் எழும்பும். உதாரணமாக, திருமணம் எப்படி நடக்கும். வருங்கால கணவருடன் மகிழ்ச்சியாக வாழ முடியுமா? குடும்ப உறுப்பினர்கள் புரிந்து கொள்வார்களா? என இதுபோன்ற கேள்விகள் வரும்.
பொதுவாகவே, நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் தான் இது அதிகமாகவே இருக்கும். இது போன்ற கேள்விகள் மனதை இன்னும் அமைதியற்றதாக வைக்கும். எனவே, திருமணத்திற்கு முன் சில விஷயங்களை செய்வது மிகவும் முக்கியம். அதன் மூலம் நீங்கள் எதிர்காலத்தில் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். இதற்காக சில முக்கியமான குறிப்புகள் இங்கு உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன அவை..
undefined
இதையும் படிங்க: திருமணமானவர்கள் யாருக்கும் சொல்லவே கூடாத 5 விஷயங்கள் பத்தி தெரியுமா? மீறி பகிர்ந்தால் வாழ்க்கையே போச்சு!!
புதிதாக திருமணமான பெண்கள் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
1. அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம்:
உறவில் ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது பொதுவானது. மேலும் அது தவறுமில்லை. ஆனால், அதை அதிகமாக வைப்பதுதான் தவறு. உங்களது அதிக எதிர்பார்ப்பு அவருக்கு சுமையாக இருக்கும். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் ஆரம்பத்தில் குறைவாக தெரிந்தாலும், காலம் செல்ல செல்ல முரண்பாடுகள் அதிகமாக வரும்.
2. மோசமான எதிர்பார்ப்பு:
பெண்களிடம் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை எதுவென்றால், அவர்கள் தங்கள் எண்ணங்களை தங்கள் துணையிடம் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளவே மாட்டார்கள். ஆனால், எதுவும் பேசாமல் புரிந்து கொள்வது என்பது எளிதல்ல. இப்படி உங்கள் துணையிடம் எதிர்பார்த்தால், அது உங்களது திருமண வாழ்க்கையை கெடுத்துவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே, உங்கள் துணையிடம் மனதில் இருப்பதை வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். இதனால் பிரச்சனைகள் தானாகவே புரியும்.
இதையும் படிங்க: உங்க துணைக்கு இந்த ஒரு விஷயம் தெரியாமல் பார்த்துக்கோங்க!! தெரிஞ்சா உங்க நிலைமை அவ்ளோதான்
3. கவனமாக கேளுங்கள்:
உங்கள் துணை ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லும்போது அதை கவனமாக கேளுங்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து பதில் சொல்லுங்கள். இந்த விஷயங்களை நீங்கள் இருவரும் பின்பற்றினால், திருமண வாழ்க்கையில் வரும் பல சாத்தியமான சிக்கல்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படும்.
4. சிக்கலை தீர்க்கவும்:
திருமண வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் கருத்துவேறுபாடுகள் கண்டிப்பாக வரும். சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் பரஸ்பர முரண்பாடுகளுக்கு காரணமாகும். சில சமயங்களில் ஒரு சிறிய விஷயம் கூட பெரிய பிரச்சனையாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் பிரச்சினையை தீர்க்காமல் அப்படியே விட்டுவிடாமல் இருப்பது முக்கியம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதை பற்றி விவாதித்து பிரச்சனைக்கு கண்டிப்பாக தீர்வு காண்பது மிகவும் அவசியம். இப்படி செய்தல் எந்த தவறாக நடக்காது மற்றும் உங்களது திருமண வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D