உங்க கணவரை சந்தோஷப்படுத்த எந்த பரிசும் தேவையில்லை.. இந்த 6 விஷயங்களை மட்டும் செஞ்சா போதும்..

By Kalai Selvi  |  First Published Jul 13, 2024, 8:00 PM IST

Relationship Tips : நீங்கள் உங்கள் திருமண உறவை வலுப்படுத்த விரும்பினால், முதலில் உங்கள் கணவர் உறவில் என்ன விரும்புகிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


உறவு என்று வரும் போது பெண்கள் தங்கள் கருத்துக்களை எளிதில் வெளிப்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை. இதனால் தான் பல சமயங்களில் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சில விஷயங்கள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கணவர் என்ன விரும்புகிறார் என்பதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

உறவில் ஆண்கள் விரும்புவது இதுதான்:

Tap to resize

Latest Videos

undefined

1. பொதுவாகவே ஒவ்வொரு ஆணும் தனது மனைவி தன்னை மதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  எப்பேர்ப்பட்ட சூழலையும் தனக்கு முழு மரியாதை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பல நேரங்களில் சில காரணங்களால் பெண்களால் இதை செய்ய முடியாது. இதனால் உறவில் தூரம் வரத் தொடங்கும். எனவே, உங்கள் உறவு வலுவாக இருக்க விரும்பினால், இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

2. பாராட்டு:
ஒவ்வொரு கணவரும் தனது மனைவி சிறிய விஷயங்களுக்கு கூட தன்னை பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும், இது அவர்களை ஊக்குவிக்கும். பெண்கள் எந்த குடும்ப வேலைக்காகவும் தங்கள் கணவரை புகழ்ந்தால் அவர்கள் அதை விரும்புவார்கள்.

இதையும் படிங்க:  கணவனின் மொபைலில் பார்த்த அந்த ஒரு விஷயம்... திருமண உறவுக்கே உலை வைத்தது எப்படி? 

3. உணர்வை புரிந்து கொள்வது:
ஆண்கள் தங்கள் மனைவி எப்போதும் தங்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எந்த ஒரு விஷயத்திலும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்கவும், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் விரும்புகிறார்கள்.

4. ஒவ்வொரு விஷயத்திலும் ஆதரவு:
கணவன்மார்கள் தங்கள் மனைவி ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை விரும்புகிறார்கள். அது, வீட்டு பிரச்சனையாக இருந்தாலும் சரி, அல்லது எந்த விதமான நிதி பிரச்சினையாக இருந்தாலும் சரி. எந்த ஒரு பிரச்சனையிலும் மனைவி தன் கணவனுக்கு ஆதரவாக இருந்தால், அந்த உறவு மிகவும் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க:  வீட்டில் வெறும் உள்ளாடைளுடன் திரியும் மனைவி.. கொந்தளிக்கும் கணவன்!!

5. பகிர்ந்து கொள்ளுதல்:
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது அவசியம். நீங்கள் உங்கள் கணவரை புரிந்து கொண்டால் அவர் தனது எல்லா பிரச்சினைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார். மேலும் அவரை நீங்கள் எதற்கும் நியாயம் தீர்க்க கூடாது, அவர் தனது உணர்வுகளை உங்களிடம் சுதந்திரமான மனதுடன் வெளிப்படுத்தும் அளவிற்கு நீங்கள் அவரிடம் நடந்து கொள்ள வேண்டும், மேலும் அவரை ஒருபோதும் தவறாக புரிந்து கொண்டு நடக்க கூடாது.

6. தரமான நேரத்தில் செலவிடுதல்:
கணவன் தன் மனைவியிடம் தரமான நேரத்தை செலவிட விரும்புகிறான். தரமான நேரம் என்பது ஒன்றாக உட்கார்ந்து பிரச்சினைகளை தீர்ப்பது அல்ல. அது என்னவென்றால், நீங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து அழகான நினைவுகளை உருவாக்குவதாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!