தாம்பத்ய வாழ்க்கைக்கு சிறந்த நேரம்..! எந்தெந்த நாட்கள் கூடாது தெரியுமா..?

By thenmozhi gFirst Published Jan 7, 2019, 12:53 PM IST
Highlights

திருமணம் முடிந்து முதலிரவுக்காக, நல்ல நேரம் பார்த்து தான் பெரியவர்கள் முடிவு செய்வார்கள். ஆம் தாம்பத்திய மேற்கொள்ளும் போதும் நல்ல நாட்களில், நல்ல நேரத்தில் நடக்க வேண்டுமென சாஸ்திரம் கூறுகிறது.

தாம்பத்ய வாழ்க்கைக்கு சிறந்த நேரம்..! 

திருமணம் முடிந்து முதலிரவுக்காக, நல்ல நேரம் பார்த்து தான் பெரியவர்கள் முடிவு செய்வார்கள். ஆம் தாம்பத்திய மேற்கொள்ளும்போதும் நல்ல நாட்களில், நல்ல நேரத்தில் நடக்க வேண்டுமென சாஸ்திரம் கூறுகிறது.

அதன்படி அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை, பிரதமை, சதுர்த்தி, சஷ்டி அஷ்டமி, ஏகாதசி, சதுர்த்தசி ஆகிய நாட்களில் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட கூடாது என்றும் ரோகிணி, அஸ்தம், அனுஷம் சுவாதி, ரேவதி, மூலம், உத்திரம், சதயம் நட்சத்திரங்கள் தாம்பத்தியம் போது சிறந்தவையாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, விரததினம், விரதத்திற்கு முந்தியநாள், தீட்டு நாட்கள், ஞாயிற்றுக்கிழமை, கிரகணம் இதுபோன்ற நாட்களுக்கும் கூடாது.அது மட்டுமல்லாமல் வயிறு நிரம்ப உண்ட உடனே அல்லது   ஜீரணமாகாது இருக்கும் போதும் தாம்பத்தியம் கூடாது. சரி இப்போது தான் இருக்கவேண்டும் என கேட்கிறீர்களா? இரவில் முதல் இரண்டு ஜாமத்திலும் அதிகாலை நான்கு ஜாமத்திலும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது கூடாது.

சரி எந்த நேரத்தில் தான் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என கேட்கிறீர்களா மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் விடியற்காலை 2 மணி முதல் 4 மணி வரையிலும் இரவு 10 மணி முதல் இரண்டு மணி வரையிலும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் சிறந்த நேரமாக கருதப்படுகிறது.

அதாவது மாலை 6 மணி முதல் விடியற்காலை 6 மணி வரையில் உள்ள ஏதாவது ஒரு நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடலாம். ஆனால் அன்றைய தினத்தில் மேற்குறிப்பிட்ட அஷ்டமி அமாவாசை சதுர்த்தி போன்றவைகள் இல்லாமல் இருந்தால் மிகவும் நல்லது.
 

click me!