உங்கள் துணையிடம் இந்த நேரத்தில் கேட்க வேண்டிய " 7 கேள்விகள் " இதோ..!

By thenmozhi gFirst Published Jan 5, 2019, 6:38 PM IST
Highlights

கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து வரை செல்வதற்கு பல காரணங்களை கூறபட்டாலும், இரு மனங்கள் சேர்ந்து வாழ சில விஷயங்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து வரை செல்வதற்கு பல காரணங்களை கூறபட்டாலும், இரு மனங்கள் சேர்ந்து  வாழ சில விஷயங்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அதில் குறிப்பாக, தன் துணைக்கு ஏதாவது என்றால் நீங்கள் உறுதுணையாக உள்ளீர்கள் என்பதை முதலில் உணர வைக்க  வேண்டும். அடுத்ததாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் அக்கரை. அடுத்ததாக தனி நேரத்தை ஒதுக்கி கொஞ்சம் நேரமாவது பேசுவது.

இவை மூன்றுமே மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் ஏதாவது ஒன்று கிடைக்காவிட்டால் கூட, குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே விரிசல் ஏற்பட தொடங்கும். அதாங்க நாம மிக எளிதாக பயன்படுத்தும் வார்த்தையான கருத்து வேறுபாடு.

சரி. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இது போன்ற பிரச்னை வராமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?
இந்த ஏழு கேள்விகளை மனதில் பதிய வைத்தாவது, தன்  துணையிடம் கேளுங்கள்..

நல்ல தூக்கம் இருந்ததா இல்லையா..?  குறைவான நேரம் மட்டுமே உறக்கம் கொண்டாயா..?

எப்போதும் சாப்பிடுவது போல சாப்பிட்டாயா ? அல்லது வேறு ஏதாவது  புது வகையான உணவை வெளியில் இருந்து எடுத்துக்கொண்டாயா..?

சாப்பிடும் போது உனக்கு பிடித்த மாதிரியான உணவை எடுத்துக் கொண்டாயா ? டேஸ்ட் பிடிக்காமல் சாப்பிட்டாயா..? 

நல்ல உறக்கம் கொண்டும் உடல் நிலையில் தொய்வாக உள்ளதா..?

இப்போது நல்ல மனநிலையில் தான் இருக்கியா..?

சின்ன சின்ன வேலைகள் செய்ய முடியுமா..? 

வாழ்க்கை முடிந்துவிட்டது போன்ற எண்ணம் வருகிறதா..? மேல் உள்ள இந்த ஏழு கேள்விகள் மூலம் தன் துணை எந்த மனநிலையில் உள்ளார் என்பதையும், மன அழுத்தம் உள்ளதா என்பதையும் தெரிந்துக்கொள்ள முடியும். இது போன்ற கேள்விகளால், உங்கள் துணை மீது, உங்களுக்கு எந்த அளவிற்கு அக்கறை உள்ளது என்பதை அவர்களே தெரிந்துக்கொள்வார்கள்.
 

click me!