
பதினைந்து வருட பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் அக்கவுண்ட் (15 year public provident fund account-PPF)
அரசு மற்றும் பெரிய தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு வருங்கால வைப்பு நிதிக்கணக்குகள் இருப்பது உண்டு
ஆனால் சிறிய நிறுவனங்களில், பணியாற்றுவோருக்கோ அல்லது சிறு தொழில் புரிவோருக்கோ இந்த வசதி வாய்ப்பு இருப்பதில்லை
இதனை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக,தபால் அலுவலகங்களில் மிக சிறப்பான திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன
இந்த திட்டத்தின் படி,
மாதம் தோறும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகையை 15 ஆண்டுகளுக்கு செலுத்தி வர வேண்டும்
குறைந்த பட்சம் ரூ.500 முதல் ரூ.1,50,000 வரை வருடந்தோறும் செலுத்தலாம்.
மேலும், முதல் மாதம் என்ன தொகை செலுத்துகிறோமோ,அதே தொகையை தொடர்ந்து மாதங்களுக்கு செலுத்த வேண்டும் என்பது இல்லை
15 ஆவது ஆண்டின் முடிவில் நீங்கள் செலுத்திய ஒட்டு மொத்த தொகையும் 7.6 வட்டியுடன் உங்களுக்கு திருப்பி தர முடியும்
இந்த வட்டி தொகைக்கு வரி விலக்கு உண்டு
மேலும் அவசரத்திற்கு இடையில் பணம் தேவைபட்டாலும்,கணக்கு தொடங்கி மூண்டு ஆண்டு காலம் முடிந்த வுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டம் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.அதே சமயத்தில் மாதம் தோறும் ஒரே அளவிலான தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதால், பெரும்பாலோனோர் இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.