ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! டிராய் அதிரடி..!

First Published Apr 24, 2018, 5:20 PM IST
Highlights
a good news for aircel customers


மத்திய தொலைத்தொடர்பு ஆணையமான டிராய், ஏர்செல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்த பேலன்ஸ் தொகையை அவர்களுக்கு திரும்ப வழங்க உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது

கடுமையான போட்டியின் காரணமாக ஏர்செல் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு   போதுமான சேவையை வழங்க முடியாமல் தவித்து வந்தது.

பின்னர், ஏர்செல் வாடிக்கையாளர்கள் அனைவரும் வேறு நிறுவன சேவைக்கு மாற வேண்டி அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஏர்செல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாமல் இருந்த பேலன்ஸ் தொகையை மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப செலுத்த வேண்டும் என்றும், இது குறித்த விரிவான அறிக்கையை மே 10  ஆம் தேதிக்குள் சமர்பிக்க டிராய் உத்தரவு  பிறப்பித்து உள்ளது.

இந்த அறிக்கையில்,வாடிக்கையாளர்களுக்கு திரும்ப செலுத்தப்பட்ட தொகையை திரும்ப  பெறாத வாடிக்கையாளர்கள் விவரம்

திரும்ப வழங்கப்படாத தொகை என அனைத்தும் தெளிவாக குறிப்பிட வேண்டும் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது

டிசம்பர் 1, 2017 முதல் மார்ச் 10, 2018

இந்த காலக்கட்டத்தில், போர்ட் அவுட் மூலம் வேறு நிறுவனத்திற்கு மாறியவர்களின்  விவரம், பயன்படுத்தாமல் தங்களது கணக்கில் வைத்திருக்கும் தொகை, மீதம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை என அனைத்தும் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மார்ச் 10, 2018-க்குள் மற்ற நிறுவன சேவைக்கு மாறாதவர்கள் விவரம் மற்றும், அவர்களுடைய கணக்கில் உள்ள தொகை குறித்த  விவரத்தையும் கேட்டு உள்ளது.

மேலும் போர்ட் அவுட் மூலம் வேறு நிறுவன சேவைக்கு மாறிய  வாடிக்கையாளர்களுக்கு, மீதமுள்ள தொகைக்கான ஒரு குறுந்தகவல்  மூலம் தெரிவிக்க வேண்டும் என மற்ற நிறுவனங்களுக்கு டிராய் தெரிவித்து உள்ளது

இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!