எண்ணெய் சருமத்தால் சிரமப்படுகிறீர்களா..? உங்களுக்காக பெஸ்ட் 4 ஃபேஸ் பேக்.. கண்டிப்பா ஒன்னு ட்ரை பண்ணி பாருங்க!

By Kalai Selvi  |  First Published Jul 5, 2024, 12:51 PM IST

Oily Skin Face Pack : எண்ணெய் பசை சருமத்தை போக்க இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள 4 பேஸ் பேக்குகளில், ஏதாவது ஒன்றை முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.


எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பது மிகவும் கடினம். அதுமட்டுமின்றி, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அடிக்கடி சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். என்னை சருமத்தில் முகப்பரு கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் அதிகம் வரும் 

இத்தகைய சூழ்நிலையில், எண்ணெய்
சருமத்தை அகற்ற பலர் பலவிதமான பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி இதற்காக சிலர் விளைவு இருந்த ஃபேஸ் வாஷ் மற்றும் ஃபேஸ் பேக் கூட பயன்படுத்திகிறார்கள். ஆனால், இவற்றால் எந்த பயனுமில்லை.

Latest Videos

undefined

எனவே இன்றைய கட்டுரையில், சில பேஸ் பேக்குகளை பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்ல போகிறோம். அதை நீங்கள் பயன்படுத்தினால் எண்ணெய் சருமத்தில் இருந்து சிறிது நிவாரணம் பெறுவீர்கள். அவை..

வெள்ளரி மற்றும் தேன்: 
வெள்ளரி மற்றும் தேன் எண்ணெய் சருமத்திற்கு பெரிதும் நிவாரணம் அளிக்கும். இந்த ஃபேஸ் பேக் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு அதில் 2 ஸ்பூன் தேன் கலந்து இப்போது அதை உங்கள் முகத்தில் தடவவும் 10 நிமிடம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவும் இந்த ஃபேஸ் பேக் உங்கள் முகத்தை பலபலப்பாக்கம் மற்றும் உங்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கும்.

தயிர் மற்றும் மஞ்சள்:
தயிர் எண்ணெய் பசையை நீக்க சிறந்த தேர்வாகும். அத்தகைய சூழ்நிலையில் ஒரு பாத்திரத்தில் தயிர் எடுத்து, அதில் சிறிதளவு தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து அதை உங்கள் முகத்தில் தடவவும். இந்த பேஸ் பேக்கை நீங்கள்
தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

ரோஸ் வாட்டர் மற்றும் தேன்: 
பல சரும பிரச்சனைகளை நீக்குவதில் ரோஸ் வாட்டர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை சுத்தம் செய்ய ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டருடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

ஓட்ஸ் மற்றும் காய்ச்சாத பால்:
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க முதலில் ஓட்ஸை மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு பவுலில் போட்டு அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து நன்கு கலந்து, அதை உங்கள் முகத்தில் தடவுங்கள். இந்த ஃபேஸ் பேக் உங்கள் முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவும்.

click me!