Good Healthy Habits : நீங்கள் ஆரோக்கியத்தில் சிறந்து இருக்கவும், எல்லா நோய்களிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கவும், வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கவும் இப்போதிலிருந்து சில விஷயங்களை தொடங்குங்கள்.
நீங்கள் ஆரோக்கியத்தில் சிறந்து இருக்கவும், எல்லா நோய்களிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கவும், வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கவும் இப்போதிலிருந்து சில விஷயங்களை தொடங்குங்கள்.
உங்களுக்கு தெரியுமா.. சில தினசரி பழக்கவழக்கங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க ரொம்பவே உதவியாக இருக்கும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடற்தகுதியைப் பராமரிக்கவும், இன்று இந்த கட்டுரையில், உங்கள் அன்றாட வழக்கத்தில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்யுங்கள்.
ஆரோக்கியமாக இருக்க காலையில் செய்ய வேண்டிய முக்கிய சில விஷயங்கள் இங்கே..
சூடான நீரும், உடற்பயிற்சியும்..
உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள, உங்களின் உணவுப்பழக்கமும், அன்றாடப் பழக்கவழக்கங்கள் சரியாக இருப்பது மிகவும் அவசியம். எனவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள். இது உடலில் இருந்து நச்சுத்தன்மையை நீக்கும். அதன் பிறகு, தினமும் காலையில் குறைந்து 30 நிமிடங்கள் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குங்கள். இந்த பழக்கள் உங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல முறையில் வைத்திருக்கும்.
சத்தான காலை உணவு..
ஆரோக்கியமான உணவுகள் நமது உடலுக்கு ஆற்றல் ஆதாரமாக உள்ளது. நாம் உண்ணும் உணவு வகை நமது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா..? உணவில் மிக முக்கியமானது காலை உணவு தான். எனவே, பழங்கங்கள், பச்சை காய்கறிகள், முட்டை, பால், நட்ஸ்கள் மற்றும் விதைகள் போன்றவை சாப்பிடுங்கள். ஏனெனில், காலையில் உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் நிறைவான உணவு தேவை அவசியம்.
அதுபோல, மதியம் உணவும் கனமாக இருக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதில், பச்சை காய்கறிகள், கீரைகள் மற்றும் தயிர் சாப்பிடுங்கள். மேலும், சாப்பிட்ட பிறகு சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வொர்க் அவுட்க்கு முன் 'இந்த' அஞ்சுல ஏதாவது ஒன்று சாப்பிடுங்க.. ஆரோக்கியமா இருப்பீங்க..
பகலில் அதிகம் உட்கார வேண்டாம்..
நீங்கள் அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தால், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் உங்கள் நாற்காலியில் இருந்து எழுந்து நடங்கள். அப்படி செய்யவில்லை என்றால், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளை கொண்டு வரும்.
இது தவிர, ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக, ஒவ்வொரு பருவத்திலும் உடலில் நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
இதையும் படிங்க: இனி காபி, டீக்கு பதிலாக தினமும் காலையில் இந்த 5 டிரிங்ஸ்ல ஒன்னு குடிங்க.. ஹெல்தியா இருப்பீங்க..
இரவு உணவும், நல்ல தூக்கமும்..
நீங்கள் உங்கள் இரவு உணவை 6-7 மணிக்குள் சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். முக்கியமாக இரவு உணவு எப்போதும் இலகுவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் சத்தான மற்றும் பச்சை காய்கறிகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். மேலும் இரவில் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டாம்.
இரவு உணவிற்கு பிறகு குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்கவும். அதுபோல இரவு 10 மணிக்குள் தூங்குவது அவசியம். நீங்கள் தூங்கு செல்வதற்கு முன் மஞ்சள் பால் குடித்து விட்டு தூங்குங்கள். ஏனெனில், இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் மற்றும் பல நோய்கள் இருந்து உங்களை பாதுகாக்கும்.
மேலே சொன்ன விஷயங்களை நீங்கள் தினமும் கடைப்பிடித்து வந்தால், நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.