அரைஞாண் கயிறு அவசியம் கட்ட வேண்டுமென்று பலர் கூறுகின்றனர். அது ஏன் என்றும், அதில் ஒளிந்திருக்கும் அற்புத நன்மைகள் எதுவென்று இங்கு பார்க்கலாம்.
அந்த காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தான் கருப்பு கலரில் அரைஞாண் கயிறு கட்டுவது வழக்கம். அதிலும் சிலரோ வெள்ளி அல்லது தங்கத்தில் தங்கள் குழந்தைக்கு கட்டுவார்கள். சொல்லப்போனால் இந்த அரைஞாண் கயிறு தமிழ்நாட்டில் தான் அதிகம் கட்டுவது வழக்கம். பொதுவாகவே, பலர் அரைஞாண் கயிறை கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை காரணமாக சிலர் காட்டுவார்கள். இன்னும் சிலரோ, வீட்டில் பெரியவர்கள் சொல்லி காட்டுவார்கள்.
ஆனால், வளர்ந்து வரும் நாகரீகத்தை விரும்பும் இளம் தலைமுறையினர், அதில் ஒளிந்திருக்கும் மகத்துவம் பற்றி தெரியாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று அவற்றை புறம் தள்ளுகிறார்கள். மேலும் அரைஞாண் கயிறு கட்டுவது ஆன்மிகம் மட்டுமின்றி அறிவியலும் நிறைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, அரைஞாண் கயிறு கட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இதோ இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
இதையும் படிங்க: கெட்டுப்போன முட்டையை சுலபமான முறையில் கண்டறியும் வழிகள் இதோ..!!
அரைஞாண் கயிறு: அரை என்றால், உடம்பில் பாதியாகும். அதாவது உங்கள் இடுப்பு பகுதியாகும். ஞாண் என்றால் கயிறு. இது இடுப்பில் கட்டப்படும் கயிறு என்பதால், அரைஞாண் கயிறு என அழைக்கப்படுகின்றது.
ஆண்கள் அரைஞாண் கயிறு காட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்: பொதுவாகவே பெண்களை விட ஆண்களுக்குத் தான் அதிக குடல் இறக்கம் ஏற்படும். எனவே ஆண்கள் இந்த கயிறை தினமும் கட்டுங்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆண்களுக்கு ஏற்படும், ஆண்மை கோளாறுகளையும் தடுக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பார்ப்பதற்கு "இந்த" விதை சின்னதாக இருக்கும்.. ஆனால் பல அற்புதங்களை செய்யும்.. அது என்ன தெரியுமா?
பெண்கள் அரைஞாண் கயிறு காட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்: பெண்கள் அரைஞாண் கயிறு கட்டினால் அவர்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் முதுகு வலி குறையும் என்பது நம் முன்னோர்களின் கூற்று.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆன்மீக நன்மை: ஆன்மீகத்தின் படி, கருப்பு நிற கயிற்றை அணிந்தால், எதிர்மறை சக்திகள் நம்மை அண்டாது என்பது ஐதீகம். இது நம் உடலுக்கும், மனதிற்கும் பாதுகாப்பு என்று கூட சொல்லலாம். இதனால் தான் நம் முன்னோர்கள் அரைஞாண் கயிறு கண்டிப்பாக கட்ட சொல்கிறார்கள்.