புது டிரஸ் வாஷ் பண்ணாமல் யூஸ் பண்றீங்களா? ஜாக்கிரதை..! ஏன் தெரியுமா?

By Kalai Selvi  |  First Published Oct 14, 2023, 1:57 PM IST

கடைகளில் வாங்கிய புது டிரெஸ்ஸை துவைத்த பிறகு தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுகிறார்கள் அது ஏன் தெரியுமா?


புதிய ஆடைகளை விரும்பாதவர்கள் யார் தான். அதுவும் பண்டிகை காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. ஏனெனில், புது துணி வாங்குவதற்காக மக்கள் ஈ மொய்த்தது போல் கடைகளில் குவிந்து இருப்பார்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் எதை வாங்குவது என்ற குழப்பத்தில் இருப்பார்கள். பலர் பண்டிகை காலங்கள் தவிர மற்ற சமயங்களிலும் அவ்வப்போது புது துணிகளை எடுப்பார்கள். 

மேலும் பலர் தங்களது பிறந்தநாள் அல்லது பண்டிகை நாட்களுக்கு வாங்கிய துணியை பண்டிகை நாட்கள் வரை காத்திருக்காமல் அவற்றை
முன்கூட்டியே போட்டுப் பார்ப்பார்கள். ஆனால் இவ்வாறு செய்வது தவறு. புதிய ஆடைகளை துவைக்காமல் பயன்படுத்தினால் உடல்நல போராடுகள் ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது. இது கேட்பதற்கு உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  துணி துவைக்கும் போது வாஷிங் மெஷினில் ஐஸ் போடுங்களே...அந்த அதிசயத்தை நீங்களே தெரிஞ்சிப்பீங்க..!!

பெரும்பாலானோர் கடைகளில் வாங்கி வந்த துணியை வீட்டில் பல முறை போட்டு பார்ப்பதை வழக்கமாகக்  கொண்டுள்ளனர். ஆனால், இப்படி செய்வது தவறு என்கின்றனர் நிபுணர்கள். இதனால் தொற்று நோய்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

இதையும் படிங்க:  இரவில் ட்ரெஸ் இல்லாமல் தூங்குவது நல்லதா கெட்டதா?? நிபுணர்கள் கூறுவது என்ன?

டிரையல் பார்ப்பது:
இந்தியாவில் கடைகளில் இருந்து வாங்கி வந்த புதிய ஆடைகளை யாரும் துவைப்பதில்லை. இது ஒரு அவமானமாக கருதப்படுகிறது. ஆனால் இது தவறு என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது நீங்கள் துணிக்கடைகளுக்கு செல்லும் போது அங்கு இருக்கும் டிரெஸ்ஸிங் ரூமில் ட்ரையல் பார்க்கிறீர்கள். ஆனால் அது தவறு. ஏனெனில் உங்களுக்கு முன் பல பேர் அந்த ட்ரெஸ்ஸை ட்ரையல் பார்த்திருப்பார்கள். இத்தகைய ஆடைகளை அணிவதால் தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

புதிய ஆடைகளில் பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள்:
நாம் நாம் கடைகளில் வாங்கும் டிரஸ் புது டிரஸ் என்று நினைக்கிறோம் . ஆனால் அவை அப்படி அல்ல. அவை எங்கோ சேமிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு இடம் சுத்தமாக இருக்கிறதா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியுமா? பேக்கிங் செய்யும் போது அதனை கீழே போட்டிருக்கலாம். 
இப்படியே அந்த புதிய ஆடைகள் கை மாறி, தயாரிக்கப்படுகின்றன. எனவே பாக்டீரியா மற்றும் கிருமிகள் அவற்றில் இருக்க வேண்டும். அதனால்தான் புதிய ஆடைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு முறை துவைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆடைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள்:
துணிகளை தயாரிக்க பல இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்போதெல்லாம் ரெடிமேட் ஆடைகள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. அவற்றின் தயாரிப்பில் வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் பிற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரசாயனங்கள் சில துணிகளை மெருகூட்டுவதற்கும் அச்சிடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் புது ஆடைகள் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும்.. ஒரு முறை துவைப்பது நல்லது.

புதிய ஆடைகள் அரிப்பு ஏற்படுத்தும்:
ஒன்றைக் கவனியுங்கள். புதிய ஆடைகளை அணியும் போதெல்லாம் அரிப்பும் எரிச்சலும் ஏற்படும். அதற்கு காரணம் அவற்றில் உள்ள பாக்டீரியாக்கள் தான். மேலும் புதிய ஆடைகள் வியர்வை மற்றும் தண்ணீரை அதிகம் உறிஞ்சாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு புதிய ஆடைகளின் ஆபத்து:
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் புதிய ஆடைகளை அணிய விரும்பினால், அவர்கள் துவைக்க வேண்டும். இதனால் நோய்களைத் தவிர்க்க வசதியாக இருக்கும். இல்லையெனில் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

click me!