உடலுறவில் பல ஆரோக்கியமான நன்மைகள் இருந்தபோதிலும், கணவன் மனைவி ஆகிய இருவரும் பாலியல் சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் யாராவது அதை கடைபிடிக்க தவறினால் பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
உடலுறவின் போதும் மற்றும் அதற்குப் பிறகு சரியான சுகாதாரத்தை பின்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும். சுகாதாரம் பராமரிக்கப்படாவிட்டால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். மேலும், பல ஆபத்தான நோய்களும் வர வாய்ப்புகளை அவை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதனால் கணவன் மனைவி என்று இருவரும் பாலியல் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். தூய்மை இல்லாவிட்டால், தம்பதிகளின் மகிழ்ச்சியான உறவில் இடையூறு ஏற்படும். நீங்கள் ஆரோக்கியமான உடலுறவு மற்றும் நல்ல பாலியல் இன்பத்தை அனுபவிக்க விரும்பினால், நீங்கள் கண்டிப்பாக சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
திடீரென கடும் நெஞ்சு வலி? உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? மருத்துவர் சொன்ன தகவல்
சரி செக்ஸ் வாழ்க்கைக்கு என்னென்ன சுகாதார குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
குளித்தல்
உடலுறவுக்கு முன் கண்டிப்பாக குளிக்க வேண்டும், இது உங்களுக்கு புத்துணர்ச்சி உணர்வை தருவதோடு உங்களை மேலும் சிறந்த முறையில் செயல்பட உதவுகிறது. அதே நேரத்தில் குளிக்காமல் இருந்தால் உடம்பில் மட்டுமல்லாது அந்தரங்க உறுப்புகளிலும் வியர்வை, அழுக்கு போன்றவை சேர்கின்றது. இது உங்கள் துணைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம், உடலுறவில் ஈடுபடுவதில் ஆர்வம் இல்லாமலும் போக வழிவகுக்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிறப்புறுப்பில் ரோமங்கள்
உடலுறவின் போது.. ஒருவரையொருவர் தொட விரும்புகிறார்கள். மேலும், ஃபோர்பிளேயின் போது, அந்தரங்க பகுதியில் முடி அதிகமாக இருந்தால், அது துணைக்கு சிரமமாக இருக்கும். இதனால் சிலர் முழுமையாக தங்கள் பிறப்புறுப்பில் உள்ள ரோமங்களை அகற்றுவது உண்டு. ஆனால் அப்படி செய்யாமல் அடிக்கடி அவற்றை வெட்டிவந்தாலே போதுமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.
வாய் சுத்தம்
முத்தம் என்பதும் பொதுவானது, குறிப்பாக உடலுறவு என்று வரும்போது அதுவே முதல் படியாக கருதப்படுகிறது. நல்ல உடலுறவு என்பது ஒரு நல்ல முத்தத்துடன் தான் துவங்குகிறது என்று கூட கூறலாம். ஆனால், ஆண் மற்றும் பெண் உறவில் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் நல்ல மனநிலையை கெடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே உடலுறவுக்கு முன் உங்கள் வாய் சுத்தத்தை நல்ல முறையில் பேணிப்பாதுகாக்க வேண்டும்.
என்னங்க சொல்றீங்க! ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?