பிரபலமாகும் "மருத்துவ குளியல் பொடி"..! வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா?

By ezhil mozhi  |  First Published Apr 28, 2020, 11:26 AM IST

அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது. 

பிரபலமாகும் "மருத்துவ குளியல் பொடி"..!  வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா? 

தம்மை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அதுவும் கோடை வெயில் வாடி வதைக்கும் நேரத்தில் பொதுவாகவே நம்முடைய சருமம் மிகுந்த வறட்சி அடையும். 

Latest Videos

ஆனால் இதனை பொருட்படுத்தாமல் பலரும் பல்வேறு ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையம் செல்கின்றனர். ஆனால் முகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் மிகவும் வாய்ந்தது 

அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது. 

குளியல்பொடி தயாரிக்க தேவையானது!

சோம்பு 100 கிராம், 
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், 
வெட்டி வேர் 200 கிராம், 
அகில் கட்டை 200 கிராம், 
சந்தனத் தூள் 300 கிராம், 
கார்போக அரிசி 200 கிராம்,
 தும்மராஷ்டம் 200 கிராம், 
விலாமிச்சை 200 கிராம், 
கோரைக்கிழங்கு 200 கிராம், 
கோஷ்டம் 200 கிராம், 
ஏலரிசி 200 கிராம், 
பாசிப்பயறு 500 கிராம் இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 

என்னென்ன பயன்கள்?

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாக பயன்படுத்தலாம்.

click me!