எப்படி இருந்த ஊட்டி இப்படி ஆயிடுச்சே...! பூத்து குலுங்கும் பூக்கள்... ரசிப்பதற்கு ஒருவரும் இல்லை...!

By ezhil mozhiFirst Published Apr 28, 2020, 10:45 AM IST
Highlights

சமூக வலைதளத்தில் பரவும் இந்த போட்டோவை பார்ப்பவர்கள், என்ன அழகாக பூத்து குலுங்குகிறது. இந்த  பூக்கள். வெறிச்சோடி காணப்பட்டாலும் பூக்களுக்கும் இது. ஒரு வசந்த காலம்தான் என கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். 

எப்படி இருந்த ஊட்டி இப்படி ஆயிடுச்சே...! பூத்து குலுங்கும் பூக்கள்...ரசிப்பதற்கு ஒருவரும் இல்லை...! 

கொரோனா எதிரொலியால் தொடர்ந்து 40 அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் அவரவர் வீட்டில்  முடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் கொடைக்காமல் என்றாலே கூட்டம் கூட்டமாக மக்கள் நடமாட்டம்  இருக்கும் ஊட்டி கொடைக்கானல் பகுதிகளில் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை என்றாலே தமிழக மக்களின் விட விருப்பமான இடமாக இருக்கும் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஒரு சில குளிர்ச்சியான இடங்கள். ஒரு பக்கம் மாணவர்களுக்கு பள்ளி  கல்லூரி விடுமுறை, மற்றொரு பக்கம் கோடை வெயில்.. இந்த தருணத்தில் தனது குழந்தைகளுடன் கோடை  விடுமுறையை குளுகுளுன்-னு என்ஜாய் செய்ய ஊட்டிக்கு செல்வது வழக்கம். அங்குள்ள போட்டிங், கார்டன், அழகழகாக பூத்துக்குலுங்கும் பூக்கள் என சொல்லிக்கொண்டேபோகலாம்.

ஆனால் இந்த ஆண்டு ஊட்டிக்கு மட்டுமல்ல..அவசர ஆத்திரத்திற்கு கூட வெளியில் செல்ல முடியாத சூழல்  உருவாகி  உள்ளது. காரணம் கொரோனா என்ற ஒற்றை வைரஸ் தான். இந்த நிலையில் ஆள் நடமாட்டம் இல்லை என்றால், ஊட்டி பொட்டானிகல் கார்டனில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

பார்க்கவே மிக அழகாக  இருக்கும் இந்த காட்சியை அருகில் இருந்து ரசிக்க முடியவில்லை என்றாலும், தூரத்தில் இருந்தாவது புகைப்படம் மூலம் ஊட்டியின் அழகை ரசித்து பார்க்கலாம்.

சமூக வலைதளத்தில் பரவும் இந்த போட்டோவை பார்ப்பவர்கள், என்ன அழகாக பூத்து குலுங்குகிறது. இந்த  பூக்கள். வெறிச்சோடி காணப்பட்டாலும் பூக்களுக்கும் இது. ஒரு வசந்த காலம்தான் என கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். 

click me!