அடேங்கப்பா! இது திருமண அழைப்பிதழா? அல்லது ஆய்வுக் கட்டுரையா? வித்தியாசமான யோசனை தான்..

By Kalai Selvi  |  First Published Nov 29, 2023, 4:16 PM IST

வங்கதேசத்தில் ஆய்வு கட்டுரை வடிவில் ஒரு ஜோடி தங்கள் திருமண அழைப்பிதழை அச்சடித்துள்ளனர். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.


திருமண சீசன் தொடங்கிவிட்டது. திருமணம் என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் நடக்கும் மிகவும் முக்கியமான நிகழ்வு ஆகும். அந்தவகையில் சமீபகாலமாகவே, திருமணங்கள் தொடர்பான பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சிரிக்கவும் வைக்கிறது. இது இந்தியாவில் மட்டுமின்றி, பிற நாடுகளிலும் திருமணங்களில் வினோதமாக நடக்கும் நிகழ்வுகள் நம்மை  ஆச்சரியப்பட வைக்கிறது. அதிலும் குறிப்பாக திருமண அழைப்பிதழ். ஆம்..சமீப காலமாகவே பலர் தங்களது திருமண அழைப்பிதழ்களை வித்தியாசமான முறையில் அச்சடித்து நம்மை ஆச்சரியமடையச் செய்கின்றனர். மேலும் அவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி, சமீபத்தில் "ஆய்வுக் கட்டுரை" வடிவத்தில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வங்கதேசத்தை சேர்ந்த சஞ்சனா தபசும் சினேகா மற்றும் மஹ்ஜீப் இமோன் தம்பதியின் திருமண அழைப்பிதழ் தான் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர்களது திருமணம் கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி நடந்தது முடிந்தது. அதில், திருமணம் குறித்த தகவல்கள் மட்டுமின்றி, முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் தம்பதியின் பெயர்கள், திருமணம் நடைபெறும் இடம், நேரம் ஆகியவையும் வழக்கம்போல் அதில் இடம்பெற்றிருந்தது. அதுபோல் தம்பதிகள் முதல் முதலில் சந்தித்துக் கொண்ட விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த பத்திரிக்கை 3.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 69,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பல கருத்துகளையும் குவித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

 

Still can't believe that this is a wedding invitation card 😭😭 pic.twitter.com/DeOD2L8dOo

— rayyan definitely | Booktwt stan 📚 (@rayyanparhlo)

 

"2 ஆராய்ச்சியாளர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். புரிந்துவிட்டது" என்று ஒருவர் நகைச்சுவையாகத் தெரிவித்தார். "அப்படியானால் இது ஆய்வுக் கட்டுரை இல்லை என்று சொல்கிறீர்களா?" ஒரு பயனர் கலாய்க்கும் விதமாக தனது கருத்தைத் தெரிவித்தார். மேலும் "இது நீதிமன்ற உத்தரவு போல் தெரிகிறது" என்று ஒருவர் கூறினார். கார்டைப் பார்த்தால் அது "ஒரு புத்தகத்திலிருந்து ஒரு பக்கமாக இருப்பது போல் தெரிகிறது" என்று ஒருவர் கூறினார். "இது ஒரு கட்டுரை போல் தெரிகிறது" என்று ஒருவர் கூறினார். முதல் பார்வையில் "இது ஒரு ஆய்வுக் கட்டுரை போல் தெரிகிறது" என்று ஒருவர் கூறினார்.

click me!