கொரோனாவை கட்டுப்படுத்த பெங்களூர் டாக்டர் புது முயற்சி.!!

By Thiraviaraj RMFirst Published Mar 28, 2020, 7:42 PM IST
Highlights

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரசிற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து ஒன்றை கண்டுபிடித்து அதற்கான பரிசோதனையில் ஈடுபட்டிருக்கிறார். 

T.Balamurukan

கொரோனாவை குணமாக்க சிகிச்சை முறையை கண்டுபிடித்ததாக பெங்களூரு புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ்.., 'இந்த வார இறுதிக்குள் இந்த சிகிச்சை பரிசோதனைக்கு தயாராக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நோய் எதிர்ப்பு மண்டலம் சார்ஸ்-கோவ் 2 வைரஸ் காரணமாக பாதிக்கப்படுகிறது. எங்கள் சிகிச்சை முறை, நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக செயல்படும். இதனால் நோயாளியின் உடல் கொரோனா வைரஸ்டன் முழுமையாக போராடும். இந்த மருந்து கொரோனா வைரஸின் "தடுப்பூசி" அல்ல;கொரோனா நோயாளிகளுக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக ஊசி மூலம் வழங்கக்கூடிய 'சைட்டோகைன்'களை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த ஆய்வில் நாங்கள் மிகவும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறோம். இதன் முதல் தொகுப்பு இந்த வார இறுதிக்குள் தயாராகும் என்று நம்புகிறோம்.என டாக்டர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார்.
 
click me!