
பழங்காலத்தில் இயற்கையான உணவுகளை மக்கள் அதிகம் உண்டு வாழ்ந்தனர் . ஆனால் தற்போது செயற்கை முறையில் கலப்பிடம் செய்யப் பட்டு வரும் உணவு வகைகளையே நாம் உணவாக எடுத்துக் கொள்கிறோம். அதிலும் கூட , சத்து மிக்க எந்த உணவையும் நாம் எடுத்துக் கொள்வது கிடையாது .
இதே போன்று தொடர்ந்தால், அடுத்து வரும் தலைமுறையினர் எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளாவர்கள் என்பதை சிந்தித்து பாருங்கள்.
இதனை எல்லாம் தடுக்கும் பொருட்டு , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நம் குழந்தைக்கு
வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள். அதாவது ஸ்நாக்ஸ் என்ற பெயரில் பீட்சா பர்கர் என எதையும் கொடுத்து இன்றைய குழந்தையின் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டாம் .
அதற்கு பதிலாக, கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும்,
ராகியை சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கலாம் ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம் என்பதால் தினமும் சாப்பிடலாம்
இது போன்று அதிக சத்து மிக்க யுணவு வகைகளை நம் குழந்தைக்கு கொடுத்து வந்தால், நல்ல உடல் வளத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது . எந்த நோயும் தாக்காமல் , வளமான வாழ்வு வாழலாம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.