உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி... இன்னும் 2 மாதங்களுக்கு கண்டிப்பாக சாப்பிடுங்க...

 
Published : Apr 10, 2017, 04:07 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி... இன்னும் 2 மாதங்களுக்கு  கண்டிப்பாக சாப்பிடுங்க...

சுருக்கம்

watermelon for summer

கோடை காலத்தில் பொதுவாகவே அதிக தண்ணீர்  குடிக்க தோன்றும் , அதே வேளையில் நம்  உடலிலிருந்து அதிக படியான வியர்வை  வெளியேறும் .  இதனை சமாளிக்க  அடுத்து வரும் இரண்டு  மாதங்களுக்கு  தர்பூசணி சாப்பிட்டால்  மிக சுலபமாக  நம் உடலை உஷ்ணத்திலிருந்து  பாதுகாத்துக் கொள்ளலாம்.

கோடைக் காலத்தில் தர்பூசணி விளைச்சல் பன்மடங்காக இருக்கும். அந்தந்த சீசனில் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோடையில் உடல் வெப்பத்தை குறைக்கும் ஆற்றல் இப்பழத்திற்கு உண்டு.

தர்பூசணியில் உள்ள பழங்களை கத்தியால் கீறி எடுத்துக் கொண்டு வெள்ளைப் பாகத்தை தயிர் பச்சடியாகவோ, பருப்பு போட்டு கூட்டாகவும் சமையல் செய்து சாப்பிடலாம். 

கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு குளிர் பானங்கள் கொடுப்பதற்கு பதிலாக இப்பழ ஜூஸை வடிகட்டாமல் கொடுக்க, வெயிலில் இழந்த சத்தை மீட்டுக் கொடுக்கும். 

இதில் வைட்டமின் பி1, சுண்ணம்புசத்து மற்றும் இரும்பு சத்தும் உள்ளது. சிறுநீர் வராமல் சிரமப்படுபவர்கள் இப்பழம் கிடைக்கும் காலங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் வெளியேறும் சிக்கல் தீரும்.

 இத்தனை சிறப்பு வாய்ந்த  தர்பூசணி  பழம் நம் அனைவருக்கும்  நல்லதே.  காற்றுள்ள போதே  தூற்றிக் கொள்  என்பார்கள் அதற்கேற்றார் போல்,  தர்பூசணி  பழத்திற்கு சரியான காலம்  இதுதான் என்பதால்  தினமும் சாப்பிடலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
இந்த '3' விஷயங்களை செய்தால் உடனே குளிங்க - சாணக்கியர்