உங்கள் அன்பு குழந்தை ஒரு நாளைக்கு எத்தனை டம்ளர் தண்ணீர் குடிக்கிறார்கள் ..???

 
Published : Oct 18, 2016, 04:01 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
உங்கள் அன்பு குழந்தை ஒரு நாளைக்கு எத்தனை டம்ளர் தண்ணீர் குடிக்கிறார்கள் ..???

சுருக்கம்

உங்கள் அன்பு குழந்தை ஒரு நாளைக்கு எத்தனை டம்ளர் தண்ணீர் குடிக்கிறார்கள் ..???

நாம் தினமும்  அருந்தும்  தண்ணீர் நம்  உடலுக்கு  எவ்வளவு முக்கியம்  என நாம் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு சளி, காய்ச்சல் போன்ற உடல்நிலை சரியில்லாத நேரத்தில் தண்ணீர் குடிப்பதைத் தடுக்கலாம். ஆனால் இயல்பாக இருக்கும் நாட்களில் குழந்தைகள் தேவையான தண்ணீரைக் குடிக்க அனுமதிக்க வேண்டும்.

ஏன் என்றால், தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் வெப்பம் அதிகரித்து சிறுவர்களுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும். சில குழந்தைகள் தண்ணீர் குடிக்கவே மறுத்தாலும் பெற்றோர்கள் வற்புறுத்தியாவது குறிப்பிட்ட அளவு தண்ணீரைக் குடிக்கச் செய்ய வேண்டும்.

நம் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகள் நீரினால் உருவானது. தசைகள் 70 சதவீதமும் மூளை 90 சதவீதமும் இரத்தம் 83 சதவீதமும் நீரால் உருவாகியுள்ளது என்பதால், நம்  உடல் உறுப்புகள்  சீராக  இயங்குவதற்கு  நாம்  தேவையான  அளவு  தண்ணீர்   எடுத்துக்கொள்ள வேண்டும்.

எவ்வளவு தண்ணீர்  குடிக்க  வேண்டும் ......?|

1 முதல் 3 வயது வரை -  4 டம்ளர்கள்
4 முதல் 8 வயது வரை  -  5 டம்ளர்கள்
9முதல் 13 வயது வரை - ஆண்  8 டம்ளர்கள்,  பெண்  7 டம்ளர்கள்
11முதல் 18 வயது வரை - ஆண் 11 டம்ளர்கள், பெண் -  8 டம்ளர்கள்

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1.5 லீட்டர் நீராவது கட்டாயம் குடிக்கவேண்டும். கட்டட வேலை, கல் உடைப்பது, மரம் வெட்டுவது போன்ற வெயிலில் வேலை செய்பவர்கள் 3 லீட்டர் நீர் குடிக்க வேண்டும். கோடைகாலம் வந்துவிட்டால் 4 முதல் 5 லிட்டர் நீர்  குடிக்க  வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது.

எப்படி குடிக்க வேண்டும்:

டம்ளரில் நன்றாக வாய் வைத்து, மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முழுங்கவேண்டும். அப்போதுதான் எச்சில் கலந்து வயிற்றுக்குள் சென்று உணவை ஜீரணிக்க உதவும்.

எதற்காக அதிகம் தண்ணீர் குடிக்கவேண்டும்?

போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் தலைவலி, சோர்வு போன்ற உபாதைகள் அதிகம் ஏற்படும்.

முகத்தில் ஏற்படும் முகப்பரு, அழுக்குகள் மற்றும் எண்ணெய் காரணத்தால் ஏற்படுகிறது. இத்தகைய அழுக்குகளை வெளியேற்றி பருக்கள் வராமல் தடுக்க தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும்.

உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டுசெல்ல தண்ணீர் உதவுகிறது.

உடலில் சேறும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கு தண்ணீரை அதிகம் குடிக்கவேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் அசிடிட்டி நீங்கி உடல் ஃப்ரெஷாக இருக்க உதவுகிறது.

வெறும்  தண்ணீரை குடித்தே  சில நாட்கள் உயிர்  வாழும் போது, தினமும்  நமக்கு தேவையான  தண்ணீரை  நாம் எடுத்துகொண்டால்,   மிக  சிறப்பாக  இருக்கும்.  நம்  குழந்தைகளும்  நல்ல  வளமுடன்  நோய் இல்லாமல் இருப்பார்கள்..........

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்