
சர்க்கரை நோயால் இறப்பவர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்......!!
சர்க்கரை நோயை பொறுத்தவரை நம் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை இருப்பதை மிக எளிமையாக பார்க்க முடிகிறது . அந்த அளவுக்கு இந்தியாவில் அதிகபட்சமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம்........
உங்களுக்கு தெரியுமா கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோயால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, மரபணுக் கோளாறுகள் மட்டுமின்றி வாழ்க்கை முறை மாற்றத்தினாலும் சர்க்கரை நோய் பலரை பாதித்து வருகிறது.
கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக நபர்களை பலி வாங்கிய நோய்கள் பட்டியலில் சர்க்கரை நோய் 11-வது இடத்தில் இருந்தது.ஆனால் தற்போது அது ஏழாம் இடத்தை பிடித்துள்ளது என்பது நாம் அனைவரும் வருத்தப்பட கூடிய விசியம் தான் .
மேலும், .2015-ஆம் ஆண்டு மட்டும் 3,46,000 பேர் சர்க்கரை நோயால் இறந்துள்ளனர்.இது இந்தியாவின் இறப்பு சதவிகிதத்தில் 3.3 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில், இந்த எண்ணிக்கையானது கடந்த 1990-ஆம் ஆண்டு 2.7 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது.
இந்த ஆய்வின்படி பார்த்தால், இந்தியாவில் உள்ள ஒரு லட்சம் பேரில் 26 பேர் சர்க்கரை நோயால் உயிரிழக்கின்றனர் என்பதும், .உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக சர்க்கரை நோய் நோயாளிகளை இந்தியா கொண்டிருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.
இனியாவது, வருமுன் காப்போம் என்ற தாரக மந்திரத்தை பயன்படுத்தி, நம்மை பாதுகாத்து கொள்வோம் ....!!!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.