
பெற்றோர்களே கவனியுங்க.....!!! வெங்காயத்தை விழுங்கி குழந்தை பலி.....!!!!
கர்நாடாகவைச் சேர்ந்த கல்பேஷ் மற்றும் அர்ச்சனா தம்பதிகளுக்கு நித்யஸ்ரீ என்ற ஒரு வயது குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை தனியாக விளையாடி கொண்டிருக்க , தாய் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், எதிர்பார்க்காத விதமாக , குழந்தையின் கையில் கிடைத்த சிறு வெங்காயத்தை எடுத்து, வாயில் போட்டு விழுங்கியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து மயக்கம் அடைந்த அந்த ஒரு வயது சிறு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தையை சோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், அனைத்து பெற்றோர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை எற்படுத்தி இருக்கும்.
குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான ஒன்று........இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, நாமும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்..........
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.