கேலக்ஸி நோட் 7 வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் புதிய சலுகை அறிவிப்பு

 
Published : Oct 26, 2016, 05:39 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
கேலக்ஸி நோட் 7 வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் புதிய சலுகை அறிவிப்பு

சுருக்கம்

கேலக்ஸி நோட் 7 வாடிக்கையாளர்களுக்கு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனை பாதிவிலைக்கு வழங்க உள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

தென்கொரிய நிறுவனமான சாம்சங்கின் கேலக்ஸி நோட் 7 மாடலில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் தீப்பிடித்து எரிந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால் சுமார் 2.5 மில்லியன் வாடிக்கையாளர்களிடமிருந்து கேலக்ஸி நோட் 7 மாடல் போனை சாம்சங் நிறுவனம் திரும்பப்பெற்றது. மேலும், கேலக்ஸி நோட் 7 விற்பனையை நிரந்தரமாகத் தடை செய்த சாம்சங், அந்த மாடல் போனைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், கேலக்ஸி நோட் 7 மாடல் போன்களைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நோக்கில் புதிய சலுகையை சாம்சங் அறிவித்துள்ளது. அந்த மாடல் போன்களைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடாக 88.39 அமெரிக்க டாலர் பணம் அல்லது கேலக்ஸி நோட் 8 மாடல் போன்களை பாதி விலைக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 8 விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. கேலக்ஸி நோட் 7 மூலம் இழந்த மதிப்பை நோட் 8 மாடல் மூலம் மீட்டெடுக்கலாம் என்று சாம்சங் நிறுவனம் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்