ஐயப்பன் குடி கொண்டுள்ள மேலும், சில கோவில்களையும் தரிசிப்பது சிறப்பு. அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று கூட அழைக்கிறார்கள்.
கேரளாவில் அமைந்த சபரிமலை ஐயப்பன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். சபரிமலையில் தர்மசாஸ்தாவான ஐயப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, பக்தர்கள் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக அருள்பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும், இருமுடி ஏந்தி சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே போகிறது. இங்கு கார்த்திகை மாதங்களில் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். ஆனால், இந்த கொரோனா காலகட்டத்தில் சபரிமலை செல்ல முடியாதவர்கள், இந்த தை மாத்தில் ஐயப்பன் குடி கொண்டுள்ள மேலும், சில கோவில்களையும் தரிசிப்பது சிறப்பு. அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று கூட அழைக்கிறார்கள்.
அச்சன்கோவில்:
இந்த கோவில், செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்திக் காட்சித் தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள்.
கேரளாவில் உள்ள எருமேலி:
ஐயப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு சபரிமலையை காட்டிலும் குறைவான பக்தர்களே வந்து செலகின்றனர்.
சபரிமலை:
ஐயப்பனை மணந்து கொள்ள விரும்பிய மகிஷி மாளிகப்புரத்து அம்மனாக சபரிமலையில் ஐயப்பனின் இடது பக்கத்தில் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். தன்னை மணிகண்டன் நிச்சயம் திருமணம் செய்து கொள்வார் என்ற பூரண நம்பிக்கையில், அவள் இன்றும் காத்திருப்பதாக நம்பப்படுகிறது.
ஆரியங்காவு:
ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன்அரசராக காட்சித் தருகிறார் ஐயப்பன். இது தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது.
பந்தளம்:
இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப்பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்குதான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திருஆபரணங்கள் உள்ளன. மகரவிளக்கின் போது ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும்.
குளத்துப்புழா:
இது செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது.இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறிய அளவிலேயே கட்டப்பட்டு உள்ளது. எனவே, இந்த மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்வார்கள். இந்தக் கோவில்களுக்கு சென்று வழிபடலாம்.