
இந்த முத்திரைகள் சிறுநீரகம், மூட்டுக்கள் மற்றும் மூட்டு எலும்புகள் சவ்வுகள் திடமாக இயங்க உதவுகிறது.
ஜலோதர நாசக் முத்திரை:
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளி விடவும். ஒரு பத்து முறைகள். பின் கண்களை திறந்து சுண்டு விரலின் நகத்திற்கு கீழ் கட்டைவிரல் நுனியை தொட வேண்டும். மடக்கிய சுண்டு விரலின் நகத்தின் மேல் கட்டைவிரல் நுனி தொட்டுக் கொண்டிருக்கிறது.
சுண்டுவிரல் நீர் மூலகம், கட்டை விரல்நெருப்பு மூலகம். நீர் மூலகத்தின் மேல் நெருப்பு மூலகம் உள்ளது. இரண்டு நிமிடங்கள் காலை, மாலை பயிற்சி செய்யவும். சிறுநீரகம் மிகச் சிறப்பாக சக்தி பெற்று இயங்கும்.
அதுமட்டுமின்றி, மூட்டுக்கள் மற்றும் மூட்டு எலும்புகள் சவ்வுகள் திடமாக இயங்க உதவுகிறது.
மனித உடலில் அசையும் மூட்டுகளில் மிகப் பெரியது முழங்கால் மூட்டு. இந்த மூட்டை சுற்றி மிக மிருதுவான எலும்புகள் உள்ளது. இந்த மூட்டில் சைனோவியல் என்ற மூட்டுச் சுரப்பி படலம் உள்ளது. இந்த சுரப்பிகள் சுரக்கும் தன்மை இழந்தாலும். மூட்டுக்கள் தேய்மானம் ஏற்பட்டாலும் மூட்டுவலி வரும். மூட்டுத் தேய்மானத்தில் ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ், ரூமட்டாய்டு ஆர்த்தரைடிஸ், எலும்புத் தேய்மானம் என்று உள்ளது. இந்த மூட்டுக்கள், மூட்டு எலும்புகள் சவ்வுகள் திடமாக இயங்க முத்திரைகள் உள்ளன.
வாயு முத்திரை:
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறைகள். பின் கண்களை திறந்து ஆள்காட்டிவிரலை மடித்து உள்ளங்கையில் வைத்து அதன்மேல் கட்டைவிரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை, மாலை இருவேளைகள் செய்யவும்.
அபான முத்திரை:
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறைகள். பின் கண்களை திறந்து மோதிரவிரல் நடுவிரலை மடித்து அதன் மையத்தில் கட்டைவிரல் நுனியை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் செய்யவும்.
உண்ண வேண்டிய உணவுகள்:
வெண்டைக்காய், பூண்டு, வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட், பிரண்டை, முடக்கத்தான் கீரை, முருங்கைக்கீரை, அன்னாசி பழம், எலுமிச்சை, தர்பூசணி, சாத்துக்குடி, நெல்லிக்காய், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்றவை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளவும்.மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து உடல் ஆரோக்கியமாகவும், நலமாகவும் வாழ வாழ்த்துக்கள்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.