
ஒருவரின் கால் பாதத்தில் இருக்கும் விரல்களை வைத்தே அவர்களின் உறவுமுறை, அவர்களின் உடல் நலம் பற்றி கூட கணிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பெரு விரல்
மற்ற விரல்களை விட பெரு விரல் பெரிதாக இருப்பவர்கள் படைப்பு திறம் மிக்கவர்களாக இருப்பார்கள். எல்லா வித பிரச்சனைகளுக்கும் இவர்கள் புத்திசாலிதனமாக தீர்வை எடுப்பார்கள்.
அதே சமயத்தில் மற்ற விரல்களை விட பெரு விரல் சிறிதாக இருப்பவர்கள் ஒரே நேரத்தில் பல விடயங்களை செய்வார்கள்.
திறம்பட பிரதிநிதிப்படுத்தக்கூடிய பல திறமையான இவர்களுக்கு இருக்கும்.
இரண்டாம் விரல்
இரண்டாம் விரல் பெரிதாக உடையவர்கள் தரமான தலைவர்களாக விளங்குவார்கள். இவர்களுக்கு படைப்பு திறன் அதிகம் இருக்கும்.
இரண்டாம் விரல் சிறிதாக உடையவர்கள் எதையுமே சுமையாக பார்பார்கள். ஆனாலும் அந்த விடயங்களை இணக்கமாக கையாள்வார்கள்.
மூன்றாம் விரல்
மூன்றாம் விரல் மற்றதை விட பெரிதாக இருப்பவர்கள் பணியில் தனித்துவமாகவும், துடிப்பாகவும் இருப்பார்கள்.
இதுவே சிறிதாக இருப்பவர்கள் அதிக ஓய்வாகவும், வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள்.
நான்காவது விரல்
நான்காவது விரல் பெரிதாக இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். அதுவே விரல் சுருண்டிருந்தால் அவர்கள் உறவு முறையில் மகிழ்ச்சி இருக்காது.
நான்காவது விரல் சிறிதாக இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள்.
சிறிய விரல்கள்
எல்லா விரல்களும் சிறிதாக இருப்பவர்கள் குழந்தை தனமாக இருப்பார்கள். எந்தவொரு பொறுப்பை விரும்பாமல் இருக்கும் இவர்கள் எளிதில் எல்லாவற்றுக்கும் சலித்து கொள்வார்கள்
விரல் அளவு
விரல்கள் ஒன்றன் பின் ஒன்றாக பெரிதாக இருப்பவர்கள் முறைப்படியான துல்லியமாக எல்லாவற்றையும் செய்வார்கள். நட்புக்கு விசுவாசமாகவும் இவர்கள் திகழ்வார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.