குழந்தைகள் கையில் ஸ்மார்ட்போனை கொடுப்பது ஆபத்து ...

First Published Jun 3, 2017, 1:20 PM IST
Highlights
Dont give the smartphone with babies


தற்போது போன் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது. பெரும்பாலும் அனைவரிடமும் இருப்பது ஸ்மார்ட் போன்கள் தான். குழந்தைகள் கூட ஸ்மார்ட் போனை மிக எளிதாக கையாளுகின்றனர்.

தங்களின் குழந்தை ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதை பெருமையாக நினைக்கும் பெற்றோர்கள் பலர் உள்ளனர்.

கனடாவினை சேர்ந்த குழந்தை நல மருத்துவர் கேத்தரின் பெர்கேன் ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு இடையில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை தயார் செய்தார்..

 

சான்பிரான்சிஸ்கோவில் நடந்த குழந்தைகள் நல மருத்துவ கல்வி சங்கங்களின் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில், 30 நிமிடங்களுக்கு அதிகமாக மொபைலை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பேசும் திறனானது 49 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

6 மாதங்கள் முதல் 2 வயதுள்ள 824 குழந்தைகளிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தினமும் சராசரியாக 28 நிமிடங்கள் பயன்படுத்தவதாகவும், இதனால் பேசும் திறனாவது குறைவாக உள்ளது என தெரிவித்து உள்ளனர்.

மேலும் 18 மாதங்களுக்குள்ளாக உள்ள குழந்தைகள் கட்டாயம் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!